சனீஸ்வர பகவானின் எழுச்சியால் 2024லில் உச்சத்திற்கு செல்ல போகும் ராசிகள் யார் தெரியுமா?

- Advertisement -

சனீஸ்வர பகவான் கர்மத்தின் தலைவராகவும் நியாயாதிபதியாகவும் இருக்கிறார். அவர் இடம்பெயர்ச்சியாகும் பொழுது அந்தந்த ராசிக்காரர்களின் கர்மங்களுக்கு ஏற்ப நன்மைகளையும் தீமைகளையும் கொடுக்கக் கூடியவர். சனீஸ்வர பகவான் 2024 மார்ச் மாதம் உதயமாக இருக்கிறார் இந்த உதயத்தினால் எந்தெந்த ராசிகள் பண மழை பொழியும் என்பதை பார்க்கலாம். சனீஸ்வர பகவானுக்கு விருப்பம் உள்ளவர் விருப்பம் இல்லாதவர் என்று என்று பாரபட்சம் பார்க்க மாட்டார் எவர் ஒருவருடைய கர்ம பலன்களுக்கு ஏற்ற நல் உள்ள பலன்கள் கிடைக்க இருக்கிறது அந்த பலன்களை அப்படியே கொடுக்கக் கூடியவர்.

-விளம்பரம்-

சனீஸ்வர பகவான் அவரின் அருளால் பலர் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றது. எத்தனை பெரிய துன்பங்கள் வந்தாலும் துன்பங்களில் எல்லாம் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல ஜொலிப்பதற்காகவே அவர் அத்தனை சோதனைகளையும் கொடுப்பார். காரணம் கர்மத்தின் பயனை அவரவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். கர்மத்தில் இருந்து யாரும் தப்பித்து செல்ல முடியாது. ஆகையினால் சனீஸ்வர பகவானின் உதயமானது நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்ல மற்றும் தீய பலன்களையும் கொடுக்க வல்லது. இந்த 2024 இல் சனீஸ்வர பகவானின் உதயமானது எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனீஸ்வர பகவான் 2024 இல் உதயம் நல்ல பல சாதகமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. பதவி உயர்வு கிடைக்கும் சம்பளம் அதிகரிக்கப்படும் .தொழில் வளர்ச்சி கூடும். தொழில் செய்பவர்களுக்கு இந்த சனீஸ்வர பகவானின் உதயமானது பல மங்களகரமான பலன்களை கொடுக்க இருக்கிறது. வியாபாரத்தில் அபரிவிதமான லாபத்தை கொடுக்கும். திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும் அமையும். அரசு வேலை மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த சனீஸ்வர பகவானின் உதயம் அரச மகிழ்ச்சியை கொடுக்க இருக்கிறது. எதிர்பாராத பணவரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த சனீஸ்வர பகவானின் உதயமானது 2024 பல மாற்றங்களை கொடுக்க இருக்கிறது. வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன. துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பல சாதகமான மாற்றங்கள் நடைபெற இருக்கின்றன. வேலை செய்யும் இடங்களில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடு செய்த பணம் நல்ல பண வரவை தரும். வருமானம் அதிகரிப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சிக்கான பல வழிகள் கிடைக்கும். சொல்லப்போனால் இது வாழ்வில் வசந்த காலம் ஆரம்பம் என்று கூறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களை வழங்குவதால் இந்த பலன்கள் இன்னும் உச்சம் பெற இருக்கின்றன. தொழில் வளர்ச்சி ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.. சனியின் உதய நேரத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கைகூடும். இந்த காலத்தில் புதிய வேலை வாய்ப்பு அதிகரிக்கலாம். சனியின் ஆதிக்கத்தால் செல்வ செழிப்பும் மகிழ்ச்சியும் பெருகும். இந்த நேரம் வணிக வகுப்பினருக்கு சாதகமான நேரமாக இருக்கும். சனியின் உதயத்தால் நிதி வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் திறக்கப்படும். திருமண கனவுகள் ஈடேறும்.

-விளம்பரம்-