இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளத

By Prem Kumar · 4/5/2024

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள் என்றாலே ரசம் இல்லாமல் அது முழுமை பெறாது என்றும் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு உணவில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள ரசம் ஏராளமான மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இதில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலாக்கள் உடலில் ஏற்படும் பலவகையான நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

உணவுச் சமநிலையைப் பேணவும், உடல் நலத்தை பாதுகாப்பதிலும் இதற்கு அளப்பரிய பங்கு இருக்கிறது. உடல் நிலை சரியில்லாத நேரங்களில் இப்படி ஒரு மிளகு ரசம் செய்து கொடுத்தால் சோர்வாக இருந்த நோயாளிகள் கூட சுறுசுறுப்பாக எழுந்து அமர்ந்து விடுவார்கள்.

சளி, கபம், தலைவலி, ஜலதோஷம், ஜுரம், உடல் வலி, தொண்டை கரகரப்பு, தொண்டை புண் என்று நீங்கள் எந்த வகையில் அவதிப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் ஒருமுறை இந்த ரசத்தை செய்து சாப்பிட்டு பாருங்கள், எல்லாம் எங்கு மாயமாகப் போகும் என்றே தெரியாது! எனவே தினமும் இல்லாவிட்டாலும், வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் உணவுடன் ரசம் எடுத்துக்கொள்ள தவற வேண்டாம். எப்போதும் புளி, தக்காளி சேர்த்து ஒரேபோன்ற ரசம் வைத்து சலித்துவிட்டதா? கவலையே வேண்டாம். பருப்பு, எலுமிச்சை கலவையோடு சுவையான எலுமிச்சை பருப்பு ரசம் ஒருமுறை இப்படிச் செய்து பாருங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் செய்வீர்கள்.

இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு பூண்டு ரசம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full