இனி சிக்கன் சுக்கா செய்ய நினைத்தால் மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க.

By Prem Kumar · 22/9/2024

அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க. இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதனை மிகவும் லயித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் சமைப்பார்கள். உதாரணமாக செட்டிநாடு ஸ்டைல், சேலம் ஸ்டைல், நெல்லை ஸ்டைல் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதமான சமையல் முறையை பின்பற்றுவார்கள். அந்த வகையில் இன்று நாம் மதுரை ஸ்டைலில் சிக்கன் சமைக்க உள்ளோம். சிக்கன் சுக்காவை மதுரை ஸ்டைலில் எப்படி சமைப்பது என்பது தெரியாதா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

மதுரை சிக்கன் சுக்கா என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு பகுதியில் பிரபலமான ஒரு உணவு . இந்த உணவு சிக்கன், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களால் செய்யப்படுகிறது. சிக்கனை பல விதங்களில் செய்யலாம். எப்படி செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் உலர்வாக சுக்கா போல செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலோடு சாப்பிடுவார்கள். மிதமான காரம் கொண்ட இந்த சிக்கன் சுக்கா அனைவருக்கும் ஏற்றது. இந்த உணவு பல ஆண்டுகளாக இந்திய உணவு வகைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது , மேலும் இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவாகவும் மாறியுள்ளது. இதை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிடலாம், சுவையாக இருக்கும். வீடே மணக்க மதுரை சுவையில் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இதனையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்‌ இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full