இனி சிக்கன் சுக்கா செய்ய நினைத்தால் மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க. இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதனை மிகவும் லயித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் சமைப்பார்கள். உதாரணமாக செட்டிநாடு ஸ்டைல், சேலம் ஸ்டைல், நெல்லை ஸ்டைல் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதமான சமையல் முறையை பின்பற்றுவார்கள். அந்த வகையில் இன்று நாம் மதுரை ஸ்டைலில் சிக்கன் சமைக்க உள்ளோம். சிக்கன் சுக்காவை மதுரை ஸ்டைலில் எப்படி சமைப்பது என்பது தெரியாதா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

-விளம்பரம்-

மதுரை சிக்கன் சுக்கா என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு பகுதியில் பிரபலமான ஒரு உணவு . இந்த உணவு சிக்கன், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பிற மசாலாப் பொருட்களால் செய்யப்படுகிறது. சிக்கனை பல விதங்களில் செய்யலாம். எப்படி செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் உலர்வாக சுக்கா போல செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலோடு சாப்பிடுவார்கள். மிதமான காரம் கொண்ட இந்த சிக்கன் சுக்கா அனைவருக்கும் ஏற்றது. இந்த உணவு பல ஆண்டுகளாக இந்திய உணவு வகைகளின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது , மேலும் இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவாகவும் மாறியுள்ளது. இதை சாதம் அல்லது ரொட்டியுடன் சாப்பிடலாம், சுவையாக இருக்கும். வீடே மணக்க மதுரை சுவையில் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

- Advertisement -
Print
No ratings yet

மதுரை சிக்கன் சுக்கா | Madurai Chicken Chukka Recipe In Tamil

அசைவ உணவுகளில் எப்போதும் அனைவரின் பேவரைட் என்று சொன்னால் அது நிச்சயம் சிக்கன் தான். சிக்கன் வைத்து பெரும்பாலும் பிரியாணி, 65, கிரேவி, மசாலா போன்றவற்றை தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை தாண்டி கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் எனில் இந்த சிக்கன் சுக்காவை செய்து பாருங்க. இதன் சுவை தாறுமாறாக இருப்பதால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இதனை மிகவும் லயித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான ஸ்டைலில் சமைப்பார்கள். உதாரணமாக செட்டிநாடு ஸ்டைல், சேலம் ஸ்டைல், நெல்லை ஸ்டைல் என்று ஒவ்வொரு ஊரிலும் ஒரு விதமான சமையல் முறையை பின்பற்றுவார்கள். அந்த வகையில் இன்று நாம் மதுரை ஸ்டைலில் சிக்கன் சமைக்க உள்ளோம். சிக்கன் சுக்காவை மதுரை ஸ்டைலில் எப்படி சமைப்பது என்பது தெரியாதா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian, Madurai
Keyword: Madurai Chicken Chukka
Yield: 4 People
Calories: 99.93kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 வர ‌மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரிஞ்சி இலை

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம், வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.‌ வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் அதனுடன் ஊற வைத்திருக்கும் சிக்கன் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் ஊற்றாமல் எண்ணெயிலே சிக்கனை 10 நிமிடங்கள் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான மதுரை சிக்கன் சுக்கா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 2.79g | Sodium: 54mg | Potassium: 77mg | Fiber: 1.27g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24mg | Iron: 2.21mg

இதனையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்‌ இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!