தாமரை விதை கிரேவி இப்படி செய்து பாருங்க! இந்த கிரேவியின் ருசியே தனி தான்!
மக்கானா என்பது தாமரையின் விதைகள். இதை ஆங்கிலத்தில் fox nuts என்றும் அழைப்பார்கள். தாமரை விதை என்றும் அழைக்கப்படும் மக்கானா வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் வட இந்தியர்களால் சிற்றுண்டி நேரங்களில் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தென்னிந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதி
மக்கானா என்பது தாமரையின் விதைகள். இதை ஆங்கிலத்தில் fox nuts என்றும் அழைப்பார்கள். தாமரை விதை என்றும் அழைக்கப்படும் மக்கானா வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் வட இந்தியர்களால் சிற்றுண்டி நேரங்களில் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தென்னிந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் கலோரி அளவு மிக மிக குறைவு. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த மக்கானாவை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக வேகமாக எடையைக் குறைக்க முடியும்.
இந்த தாமரை விதை கிரேவி சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையான கிரேவி ஆகும். பன்னீர் பட்டர் மசாலா போலவே தாமரை விதை கறியும் ரொம்பவே சுவையாக இருக்கும். நவராத்திரி, தீபாவளி போன்ற விரதமிருக்கும் பண்டிகை நாட்களில் இந்த ரெசிபி பொதுவாக செய்யப்படுகிறது. தாமரை விதைகளில் இருக்கக்கூடிய மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் சோடியமும் உள்ளன.
இதனால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் காக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம் கொண்ட இந்த மக்கானா நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பெரும்பாலானவர்கள் இந்த தாமரை விதைகளை வைத்து வெறுமனே பொரி போல வறுத்து மசாலா சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். ஒரே மாதிரி எடுத்துக் கொள்வதால் அனைவருக்கும் இது சலித்துப் போகலாம். அதனால் அருமையான சுவையில் எப்படி தாமரை விதை கிரேவி செய்து என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிறுநீரைப் பெருக்கி உடல் எடையைக் குறைத்து ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!