Home அசைவம் ருசியான மலபார் நண்டு மசாலா சுலபமாக இப்படி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க! ஆஹா...

ருசியான மலபார் நண்டு மசாலா சுலபமாக இப்படி ஒரு வாட்டி செஞ்சு பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!

கடல் உணவுகள்ள நண்டுகளுக்கு அப்படின்னு ஒரு தனி இடமே இருக்கு. நண்டு மேல விருப்பம் உள்ளவர்கள் நிறைய பேர் இருக்காங்க. இந்த நண்டுல கிரேவி செய்தாலும் சரி குழம்பு செய்தாலும் சரி வறுவல் செய்தாலும் சரி ஆம்லெட் செய்தா கூட சாப்பிடுவதற்கு அத்தனை பேர் இருக்காங்க. அதிக அளவு கால்சியம் அமிலங்களும் நிறைஞ்சது தான் இந்த நண்டு. நண்டுல ரசம் வச்சு சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும் அது சளிக்கும் காய்ச்சலுக்கும் ரொம்பவே நல்லது.

-விளம்பரம்-

நண்டுல இருக்கிற வெறும் சதைகளை மட்டும் எடுத்து அதை முட்டையோட சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். அப்படி இந்த நண்டுல நம்ம மலபார் ஸ்டைல்ல மசாலா பண்ண போறோம். அந்த மசாலா எவ்வளவு சுவையாக இருக்கும் அப்படின்னு பாத்துக்கலாம். இந்த நண்டு மசாலா எல்லா சாதத்துக்கு கூடயும் சைடு டிஷ்ஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையா இருக்கும். சொல்லப்போனால் ரசத்துக்கும் தயிர் சாதத்துக்கும் அப்படி ஒரு காம்பினேஷனா இருக்கும்.

இந்த நண்டு மசாலா ரொம்ப ஈஸியா வீட்ல இருக்குற பொருளை வைத்து எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி செய்திடலாம் இந்த நண்டு மசாலாவை. இந்த நண்டு மசாலா பிடிக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. நீங்க வாங்குற நண்டு உங்களுக்கு கிடைக்காம வீட்ல இருக்கிறவங்க சாப்பிடற அளவுக்கு அப்படி ஒரு டேஸ்டா இருக்கும். வாங்க இந்த நண்டு மசாலா எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.

Print
No ratings yet

மலபார் நண்டு மசாலா | Malabar Nandu Masala In Tamil

நண்டுல கிரேவிசெய்தாலும் சரி குழம்பு செய்தாலும் சரி வறுவல் செய்தாலும் சரி ஆம்லெட் செய்தா கூட சாப்பிடுவதற்குஅத்தனை பேர் இருக்காங்க. அதிக அளவு கால்சியம் அமிலங்களும் நிறைஞ்சது தான் இந்த நண்டு.நண்டுல ரசம் வச்சு சாப்பிட்டால் அவ்வளவு சுவையா இருக்கும் அது சளிக்கும் காய்ச்சலுக்கும் ரொம்பவே நல்லது. நீங்க வாங்குற நண்டு உங்களுக்கு கிடைக்காம வீட்ல இருக்கிறவங்க சாப்பிடற அளவுக்கு அப்படி ஒரு டேஸ்டாஇருக்கும். வாங்க இந்த நண்டு மசாலா எப்படி செய்யலாம்னு பாக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Malabar Nandu Masala
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ நண்டு
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 ஸ்பூன் கர மசாலா
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 ஸ்பூன் சோம்பு தூள்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் நண்டை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  • பிறகு இதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக குழைய வதக்க வேண்டும். பின்பு அதில் மல்லிதூள் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கலந்து விட வேண்டும்.
  • பின்பு இதில் தண்ணீர் தேவையான.அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவேண்டும். ஒரு ஐந்து நிமிடம் மசாலாக்கள் கொதித்த பிறகு அதில் கொத்தமல்லி தழைகளைத் தூவி நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள நண்டு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்போது இதன் மேல் மிளகுத்தூள், சோம்புத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு வேகவைக்க வேண்டும்.
  • நண்டு நன்றாக வெந்து வந்த பிறகு லேசாக மசாலா ஓடுசேர்த்து சூடாக பரிமாறினால் சுவையான மலபார் நண்டு மசாலா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 110kcal | Protein: 30g | Saturated Fat: 0.5g | Potassium: 630mg | Sugar: 0.5g