மணத்தக்காளி பூண்டு சாதம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

மணத்தக்காளி வத்தலும் பூண்டும் சேர்த்து ஒரு சூப்பரான சாதம் கிளறி சாப்பிடுங்க. உடம்பில் இருக்கக்கூடிய நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வயிற்றுப்புண் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மணத்தக்காளி வத்தல் அடிக்கடி உணவில் சேர்த்துக்கிறது நல்லது. அந்த வகையில மணத்தக்காளி வத்தல் வச

By ·

மணத்தக்காளி வத்தலும் பூண்டும் சேர்த்து ஒரு சூப்பரான சாதம் கிளறி சாப்பிடுங்க. உடம்பில் இருக்கக்கூடிய நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வயிற்றுப்புண் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மணத்தக்காளி வத்தல் அடிக்கடி உணவில் சேர்த்துக்கிறது நல்லது. அந்த வகையில மணத்தக்காளி வத்தல் வச்சு குழம்பு வைக்காமல் இந்த மாதிரி சாதமாவும் செஞ்சு சாப்பிடலாம் ஒரு சிலருக்கு குழம்பு ரொம்ப பிடிக்கும் ஒரு சிலருக்கு பிடிக்காது. அந்த மாதிரி இருக்கிறவங்களுக்கு இந்த மாதிரி சாதம் செஞ்சு கொடுத்தா விரும்பி சாப்பிடுவாங்க சாதத்தோடு சேர்த்து அந்த மணத்தக்காளி வத்தலையும் சாப்பிடும் போது வயிற்றுக்கு ரொம்ப ரொம்ப நல்லது.

குழந்தை பெற்ற தாய்மார்கள் கண்டிப்பா இந்த மணத்தக்காளி வத்தல சாப்பிடணும் அதோட சேர்த்து பூண்டும் சேர்த்து நம்ம சாதம் செய்வதால் மணத்தக்காளி பூண்டு சாதம் ரொம்ப ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியம் அப்படின்னு சொல்லலாம். லெமன் சாதம் தக்காளி சாதம், மிளகு சாதம், தயிர் சாதம், புளி சாதம், கருவேப்பிலை சாதம், புதினா சாதம் இந்த வரிசையில் மணத்தக்காளி பூண்டு சாதமும் இனிமேல் அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க. இந்த சாதத்தில் நம்ம பூண்டும் சேர்க்கிறதால குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு பால் நிறைய சுரக்கும் அப்படின்னு சொல்லுவாங்க. அதனால இந்த சாதத்தை கண்டிப்பாக வாரத்தில் ஒரு தடவை ஆவது குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிடணும்.

இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப ரொம்ப ஈஸி. பத்து நிமிஷத்துல இந்த சாதம் ரெடி பண்ணி முடிச்சிடலாம் சாதம் மட்டும் வடிச்சு வச்சுட்டீங்கன்னா போதுமானது அதுக்கப்புறம் இந்த சாதம் கிளறது ரொம்ப ரொம்ப ஈஸி தான். இந்த சாதத்துக்கு நம்ம மிளகாய் தூள் மிளகாய் எதுவும் சேர்க்கக்கூடாது. அதுக்கு பதிலா மிளகுத்தூள் சேர்க்கணும் இந்த சாதத்தை நல்லெண்ணெய் அப்படி இல்லனா நெய் ஊத்தி செய்கிறது ரொம்ப ரொம்ப நல்லது நம்ம இப்போ நெய் ஊத்தி தான் செய்றோம். இதுல சீரகமும் இருக்கிறதால செரிமானத்தன்மை ரொம்ப ரொம்ப ஈசியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மணத்தக்காளி பூண்டு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : முட்டை மிளகு மசாலா செய்து ரசம் சாதம் கூட வச்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியாக இருக்கும்!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை