இதுவரை மாங்காயில் சிக்கன் கறி செய்துள்ளீர்களா? இல்லையென்றால் செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

- Advertisement -

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

-விளம்பரம்-

மாங்காயில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார‌ இறுதியில் சிக்கன் செய்ய நினைத்தால் மாங்காய் சேர்த்த இந்த மாங்காய் சிக்கன் செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

- Advertisement -

சிக்கனை எப்படி செய்தாலும் அது சுவை கொடுக்கும். அதை பக்குவமாக பார்த்து பார்த்து பதமாக செய்தால் இன்னும் எத்தனை ருசியாக இருக்கும்..? அப்படியொரு ரெசிபி தான் இது. வேலை நாட்களில் அசைவ உணவு சமைக்க நேரம் இல்லை என கருதுபவர்களும், ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே கறி எடுத்து சமைக்க முடியும் என நினைப்பவர்களுக்கு எளிமையாக மற்றும் சுவையாக சிக்கனை சமைக்கும் ரெசிபி. இந்த சிக்கன் கிரேவியை பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்து விடலாம்.

Print
No ratings yet

மாங்காய் சிக்கன் கறி | Mangai Chicken Curry Recipe In Tamil

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். மாங்காயில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Mangai Chicken Curry
Yield: 4 People
Calories: 93kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி சிக்கன்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 3 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 4 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 மாங்காய்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லி தூள்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் மாங்காயை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மாங்காய் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் மாங்காய் நன்கு குழைய வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மாங்காய் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 93kcal | Carbohydrates: 9.1g | Protein: 6.64g | Fat: 7.9g | Saturated Fat: 2.1g | Sodium: 88mg | Potassium: 606mg | Fiber: 3.49g | Vitamin A: 74IU | Vitamin C: 295mg | Calcium: 24mg | Iron: 7.1mg

இதனையும் படியுங்கள் : ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!