வீடே மணமணக்க சாதத்திற்கு ஏற்ற ருசியான மாங்காய் முருங்கைகீரை சாம்பார் இப்படி செஞ்சி பாருங்க!

தினமும் மதியத்திற்கு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள். நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் கா

By ·

தினமும் மதியத்திற்கு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.

நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. இது ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வருகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலை சர்க்கரை நோயாளிகள் முதல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முருங்கையில் எப்படி சுவையான சாம்பார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

முருங்கைக் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல சாம்பார் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த முருங்கைக்கீரை சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் முருங்கைக்கீரை சாம்பார் சத்தானதும் கூட. ஏனெனில் முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்துமே இந்த சாம்பாரில் முழுமையாக இறங்கியிருக்கும்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை