மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் இன்று அனைவருக்கும் பிடித்த மாம்பழ மில்க் ஷேக் செய்து பருகல

By Prem Kumar · 3/5/2024

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா மில்க் ஷேக் மற்றும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் என்று ‌சொல்லிக் கொண்டே செல்லலாம். நாம் இன்று அனைவருக்கும் பிடித்த மாம்பழ மில்க் ஷேக் செய்து பருகலாம். முக்கனிகளான ஒன்றான மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு. இந்த அற்புத பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

இதன் பழுத்த கனிகளை அப்படியே உண்ணலாம். ஜூஸாகவும் பருகி வரலாம். மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளன. தற்போதைய காலத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் என்றால் அது மில்க் ஷேக் தான். மேலும் இந்த மாம்பழ மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது குழந்தைகளுக்கு பிடித்தவாறும், வித்தியாசமான சுவையிலும் இருக்கும்.

மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக மாம்பழத்தை கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். கடைகளில் விற்கும் மில்க் ஷேக் கெடாமல் இருப்பதற்காக சில ரசாயன பொருட்கள் சேர்த்து தயார் செய்து இருப்பார்கள். ஆனால் வீட்டில் இயற்கையான முறையில் எளிமையாக மில்க் ஷேக் தயாரிக்கலாம். ஆம் இப்போது அந்த லிச்சி மில்க் ஷேக்கை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full