Advertisement
சைவம்

கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் ரகசியம் இது தான்! இப்படி செய்து பாருங்க!

Advertisement

கோடை கலன்களில் மாங்காய் அதிகளவில் விற்கப்படும் அதனால் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். அதுவும் கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் மாங்காய் ஊறுகாய் தனி சுவைத்தான். அதே சுவையில் வீட்டிலே மாங்காய் ஊறுகாய் செய்து விடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் செய்து தயிர் சாதம்,

இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான டேஸ்டில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil

Print Recipe
கோடை கலன்களில் மாங்காய் அதிகளவில் விற்கப்படும் அதனால் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். அதுவும் கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் மாங்காய் ஊறுகாய் தனி சுவைத்தான். அதே சுவையில் வீட்டிலே மாங்காய் ஊறுகாய் செய்து விடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் செய்து தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான டேஸ்டில் இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mango pickle, மாங்காய் ஊறுகாய்
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 22 minutes
Servings 4 people
Calories 69

Equipment

  • 1 பாண்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கிலோ புளிப்பு மாங்காய்
  • ¾ டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டேபிள் ஸ்பூன்
    Advertisement
    கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • 3-4 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள்

தாளிக்க:

  • கட்டி பெருங்காயம் சிறிய துண்டு
  • ¾ கப் நல் லெண்ணெய்
  • டீஸ்பூன் கடுகு
  • கருவேப்பிலை ஒரு கொத்து

Instructions

செய்முறை:

  • முதலில் மங்காவை கழுவி சுத்தம் செய்து ஒரு துணியால் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு பாண் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், மற்றும்
    Advertisement
    கடுகு சேர்த்து சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுத்து அதனை தனியாக ஒரு தட்டில் ஆறவைக்கவேண்டும்.
  • ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து பெருங்காயம் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு நறுக்கிய மாங்காயில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மற்றும் அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தயம் பொடி சேர்த்து தண்ணீர் படாத கரண்டியால் நன்கு கலந்து வைக்கவும்.
  • பிறகு ஒரு பாண் அடுப்பில் வைத்து ¾ கப் அளவில் பாதி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து பொரிந்ததும், பொடித்த பெருங்காயம் சேர்த்து பொரிந்து சிவந்து வந்தவுடன் அதில் கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் அதனை எடுத்து கலந்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • கலந்த பிறகு ¾ கப் அளவில் பாதி எண்ணெய் தான் சேர்த்துளோம் மீதி எண்ணெய் நன்கு கொதிக்கவிட்டு இதில் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு கலந்து வெயிலில் 3 அல்லது 4 மணி நேரம் வைத்து எடுத்து வந்தால் எண்ணெய் நன்கு பிரிந்து ஊறுகாய் பதம் வந்துவிடும்.
  • இப்பொழுது சுவையான ஊறுகாய் தயார்.

Notes

குறிப்பு : தண்ணீர் எதுவும் இல்லாமல் செய்யவேண்டும் இல்லையென்றால் ஊறுகாய் விரைவில் கெட்டு விடும்.

Nutrition

Serving: 350G | Calories: 69kcal | Saturated Fat: 2.6g | Cholesterol: 1mg | Potassium: 413mg | Sugar: 0.1g | Vitamin A: 2IU | Calcium: 1.1mg | Iron: 0.2mg
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

2 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

2 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

4 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

7 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

7 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

8 மணி நேரங்கள் ago