- Advertisement -
கோடை கலன்களில் மாங்காய் அதிகளவில் விற்கப்படும் அதனால் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். அதுவும் கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் மாங்காய் ஊறுகாய் தனி சுவைத்தான். அதே சுவையில் வீட்டிலே மாங்காய் ஊறுகாய் செய்து விடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் செய்து தயிர் சாதம்,
இதையும் படியுங்கள் : கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான டேஸ்டில் இருக்கும். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
-விளம்பரம்-
மாங்காய் ஊறுகாய் | Mango Pickle Recipe In Tamil
கோடை கலன்களில் மாங்காய் அதிகளவில் விற்கப்படும் அதனால் மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். அதுவும் கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் மாங்காய் ஊறுகாய் தனி சுவைத்தான். அதே சுவையில் வீட்டிலே மாங்காய் ஊறுகாய் செய்து விடலாம். இந்த மாங்காய் ஊறுகாய் செய்து தயிர் சாதம், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமான டேஸ்டில் இருக்கும்.
Yield: 4 people
Calories: 69kcal
Equipment
- 1 பாண்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 1 கிலோ புளிப்பு மாங்காய்
- ¾ டீஸ்பூன் வெந்தயம்
- 1 டேபிள் ஸ்பூன் கடுகு
- உப்பு தேவையான அளவு
- 3-4 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள்
தாளிக்க:
- கட்டி பெருங்காயம் சிறிய துண்டு
- ¾ கப் நல் லெண்ணெய்
- 1¼ டீஸ்பூன் கடுகு
- கருவேப்பிலை ஒரு கொத்து
செய்முறை
செய்முறை:
- முதலில் மங்காவை கழுவி சுத்தம் செய்து ஒரு துணியால் துடைத்துக்கொள்ளவும். பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு பாண் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், மற்றும் கடுகு சேர்த்து சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுத்து அதனை தனியாக ஒரு தட்டில் ஆறவைக்கவேண்டும்.
- ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து பெருங்காயம் பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு நறுக்கிய மாங்காயில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மற்றும் அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தயம் பொடி சேர்த்து தண்ணீர் படாத கரண்டியால் நன்கு கலந்து வைக்கவும்.
- பிறகு ஒரு பாண் அடுப்பில் வைத்து ¾ கப் அளவில் பாதி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து பொரிந்ததும், பொடித்த பெருங்காயம் சேர்த்து பொரிந்து சிவந்து வந்தவுடன் அதில் கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் அதனை எடுத்து கலந்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- கலந்த பிறகு ¾ கப் அளவில் பாதி எண்ணெய் தான் சேர்த்துளோம் மீதி எண்ணெய் நன்கு கொதிக்கவிட்டு இதில் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு கலந்து வெயிலில் 3 அல்லது 4 மணி நேரம் வைத்து எடுத்து வந்தால் எண்ணெய் நன்கு பிரிந்து ஊறுகாய் பதம் வந்துவிடும்.
- இப்பொழுது சுவையான ஊறுகாய் தயார்.
செய்முறை குறிப்புகள்
குறிப்பு : தண்ணீர் எதுவும் இல்லாமல் செய்யவேண்டும் இல்லையென்றால் ஊறுகாய் விரைவில் கெட்டு விடும்.
Nutrition
Serving: 350G | Calories: 69kcal | Saturated Fat: 2.6g | Cholesterol: 1mg | Potassium: 413mg | Sugar: 0.1g | Vitamin A: 2IU | Calcium: 1.1mg | Iron: 0.2mg