லஞ்ச் பாக்ஸ்க்கு சுலபமான ஒரு அரைத்த மாங்காய் சாதம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுப்பதற்கு வித விதமான ரெசிபிகளை தேட வேண்டிய வேலை இல்லத்தரசிகளுக்கு உண்டு. சூப்பராக சட்டுன செய்யக்கூடிய ஒரு அரைத்த மாங்காய் சாதத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் ருசியாக எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி இன்று இந்த பதிவில் உங்களுக்காக.

-விளம்பரம்-

லஞ்ச் பாக்ஸுக்கு இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தொட்டுக் கொள்ள ஒரு வத்தல், சிப்ஸ் கொடுத்தால் கூட போதும். தேவை என்பவர்கள் ஒரு முட்டையை அவித்துக் இது கூட வைத்து விடலாம். மாங்காய் சாதம் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

- Advertisement -

பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த அரைத்த மாங்காய் சாதம் செய்து பார்க்கலாம். வடித்து வைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்க மணக்க இந்த அரைத்த மாங்காய் சாதம் தயார்.நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்ட மாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக , வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

அரைத்த மாங்காய் சாதம் | Mango Rice Recipe In Tamil

பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லாஇருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த அரைத்த மாங்காய் சாதம் செய்து பார்க்கலாம். வடித்துவைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்கமணக்க இந்த அரைத்த மாங்காய் சாதம் தயார்.நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்டமாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக , வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: mango rice
Yield: 4
Calories: 65kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 மாங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு
  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • மல்லித்தழை
  • 2 ஸ்பூன் கேரட்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை தேவையான அளவு

செய்முறை

  • அரிசியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைவாகவோ அல்லது உதிராகவோ வடித்துக்கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய், மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி மாங்காய் துருவலை சேருங்கள்.
  • இதை 3 நிமிடம் வதக்கி இறக்கி கரகரப்பாக அரைத்தெடுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் சேருங்கள்.
  • இந்த கலவையை சாதத்துடன் கொட்டிக் கலந்து, கடைசியில் நெய் சேர்த்து பரிமாறுங்கள்.
  • பிக்னிக் போன்ற பயணங்களுக்கு இந்தக் கட்டு சாதம் சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ளதேங்காய் துவையல் சூப்பர் காம்பினேஷன்.

Nutrition

Serving: 500g | Calories: 65kcal | Carbohydrates: 17g | Protein: 10.5g | Fat: 0.6g | Potassium: 156mg | Fiber: 1.8g | Vitamin A: 765IU | Vitamin C: 27.7mg | Calcium: 14mg