Advertisement
சைவம்

லஞ்ச் பாக்ஸ்க்கு சுலபமான ஒரு அரைத்த மாங்காய் சாதம் இப்படி ட்ரை பன்னி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Advertisement

தினமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுப்பதற்கு வித விதமான ரெசிபிகளை தேட வேண்டிய வேலை இல்லத்தரசிகளுக்கு உண்டு. சூப்பராக சட்டுன செய்யக்கூடிய ஒரு அரைத்த மாங்காய் சாதத்தை இன்னும் கொஞ்சம் கூடுதல் ருசியாக எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி இன்று இந்த பதிவில் உங்களுக்காக.

லஞ்ச் பாக்ஸுக்கு இந்த ரெசிபி சூப்பராக இருக்கும். தொட்டுக் கொள்ள ஒரு வத்தல், சிப்ஸ் கொடுத்தால் கூட போதும். தேவை என்பவர்கள் ஒரு முட்டையை அவித்துக் இது கூட வைத்து விடலாம். மாங்காய் சாதம் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. மலச்சிக்கலைப் போக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும். மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.

Advertisement

பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் இந்த அரைத்த மாங்காய் சாதம் செய்து பார்க்கலாம். வடித்து வைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்க மணக்க இந்த அரைத்த மாங்காய் சாதம் தயார்.நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்ட மாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக , வாங்க பார்க்கலாம்.

அரைத்த மாங்காய் சாதம் | Mango Rice Recipe In Tamil

Advertisement
Print Recipe
பொதுவாகவே காலையில் அலுவலகம் செல்பவர்களுக்கும், பள்ளிக்கூடம் செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தயார் செய்வது கொஞ்சம் கஷ்டம் தான். தினமும் சாம்பார், ரசம், குழம்பு என்று செய்து கொடுக்க முடியாது அல்லவா. வெரைட்டி ரைஸ் ஆகவும் இருக்க வேண்டும். அது வித்தியாசமான சுவையிலும் இருக்க வேண்டும். என்ன செய்வது. கொஞ்சம் புதுசு புதுசா ட்ரை பண்ணா நல்லாஇருக்கும்
Advertisement
என்று நினைப்பவர்கள் இந்த அரைத்த மாங்காய் சாதம் செய்து பார்க்கலாம். வடித்துவைத்த சாதம் மட்டும் உங்கள் கையில் இருந்தால் போதும், அடுத்த பத்து நிமிடத்தில் மணக்கமணக்க இந்த அரைத்த மாங்காய் சாதம் தயார்.நாவிற்கு ருசித்தரும் மசாலா அரைத்துப் போட்டமாங்காய் தேங்காய் சாதம் ரெசிபி இதோ உங்களுக்காக , வாங்க பார்க்கலாம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword mango rice
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 65

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கப் பச்சரிசி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் நெய்
  • 1 மாங்காய்
  • 4 பச்சை மிளகாய்
  • 2 பூண்டு
  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • மல்லித்தழை
  • 2 ஸ்பூன் கேரட்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • 1/4 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கறிவேப்பிலை தேவையான அளவு

Instructions

  • அரிசியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழைவாகவோ அல்லது உதிராகவோ வடித்துக்கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து, பச்சை மிளகாய், பூண்டு, தேங்காய், மல்லித்தழை, பெருங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி மாங்காய் துருவலை சேருங்கள்.
  • இதை 3 நிமிடம் வதக்கி இறக்கி கரகரப்பாக அரைத்தெடுங்கள். கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதில் சேருங்கள்.
  • இந்த கலவையை சாதத்துடன் கொட்டிக் கலந்து, கடைசியில் நெய் சேர்த்து பரிமாறுங்கள்.
  • பிக்னிக் போன்ற பயணங்களுக்கு இந்தக் கட்டு சாதம் சூப்பராக இருக்கும். தொட்டுக்கொள்ளதேங்காய் துவையல் சூப்பர் காம்பினேஷன்.

Nutrition

Serving: 500g | Calories: 65kcal | Carbohydrates: 17g | Protein: 10.5g | Fat: 0.6g | Potassium: 156mg | Fiber: 1.8g | Vitamin A: 765IU | Vitamin C: 27.7mg | Calcium: 14mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

17 நிமிடங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

4 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

5 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

5 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

6 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

8 மணி நேரங்கள் ago