மீன ராசிக்கு செல்லும் செவ்வாய் பகவான் இனி இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!!
வேத ஜோதிடத்தில் சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி வருகிறார். அதுவும் நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் செவ்வாய் மே
வேத ஜோதிடத்தில் சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி வருகிறார். அதுவும் நவகிரகங்களில் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் செவ்வாய் ஏப்ரல் 02 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழைவால். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 18 ஆம் தேதி செவ்வாய் உதயமாகவுள்ளார். செவ்வாய் கிரகத்தின் எதிர்வரும் பெயர்ச்சி, அனைத்து ராசியினர் வாழ்க்கையிலும் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வர காத்திருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெற போகிறார்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமான ஒரு உறவை பராமரிப்பீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்; பொருளாதார நிலையில் எதிர்பார்த்த மாற்றம் காணப்படும். பெற்றோரின் முழுமையான ஆதரவு கிடைக்கும், திறனாய்வு தேர்வு வெற்றிகள் மூலம் உதவி கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வரவுக்கு இணையாக செலவுகள் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடு வந்துச் செல்லும். குறிப்பாக மாணவர்கள் தங்கள் பள்ளி, கல்லூரி தேர்வில் சிறந்து விளங்குவார்கள், விருப்பமான துறையில் பாடம் கற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் காணப்பட்ட மனஸ்தாபங்கள் பூதாகரமாக வெடிக்கும், உறவில் விரிசல் உண்டாவதற்கு வாய்ப்புகள் காணப்படுகிறது. புதிய தொழில் வாய்ப்புகள் மற்றும் கல்வி துறையில் சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சி பலன்கள் 2026!!