Home டீ இருமல் சளினா ஏதாவது வந்ததுனா இந்த சூப்பரான மாசலா தூத் செஞ்சு குடிச்சு பாருங்க குடிக்கிறதுக்கு...

இருமல் சளினா ஏதாவது வந்ததுனா இந்த சூப்பரான மாசலா தூத் செஞ்சு குடிச்சு பாருங்க குடிக்கிறதுக்கு ரொம்ப இதமா இருக்கும்!

மசாலாத் தூள் அப்படின்னா என்ன அப்படின்னு நிறைய பேருக்கு டவுட்டா இருக்கும். இந்த மசாலா தூள் அப்படி என்றது ஒருவகையான மும்பை ஸ்பெஷல் நட்ஸ் பால் அப்படின்னு சொல்லலாம். ரொம்பவே டிஃபரண்டான டேஸ்ட்ல குடிக்கிறதுக்கு ரொம்பவே அருமையான டேஸ்ட்ல இருக்கும். ஒரு தடவ இந்த மசாலா தூள் செஞ்சு குடிச்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் இந்த டேஸ்டுக்கு நீங்க அடிக்ட் ஆயிடுவீங்க. அந்த அளவுக்கு இந்த பால் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

டீ காபி குடிக்க கூடாது அப்படின்னு சொல்லுவாங்க ஆனா நம்மளால டீ காபி குடிக்கிறத நிறுத்த முடியலனா அதுக்கு ஒரு மாற்ற இந்த மசாலா தூத் செய்து குடிக்கலாம். இதை குழந்தைகளுக்கு டெய்லி கொடுத்தா அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பெரியவங்களுக்கும் இதை கொடுத்தா குடிக்கிறதுக்கு ரொம்ப டேஸ்ட்டா அதே நேரத்துல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். ஒரு தடவை செஞ்சு உங்க வீட்டுல இந்த டேஸ்ட் காட்டிட்டிங்கனா போதும் அதுக்கப்புறம் அவங்களே திரும்பத் திரும்ப வேண்டும் என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். மசாலா பால் நம்ம டிஃபரண்டான டேஸ்ட்ல குடிச்சி இருப்போம் ஆனால் இந்த டேஸ்ட் ரொம்பவே வித்தியாசமா குடிக்கிறதுக்கு தொண்டைக்கு இதமா செம சூப்பரா இருக்கும். சளி இருமல் ஏதாவது வந்ததுன்னா இந்த மசாலா தூத் செஞ்சு குடிச்சு பாருங்க டக்குனு சரியாகிவிடும். இப்ப வாங்க இந்த டேஸ்டான ஆரோக்கியமான மசாலா தூத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
1 from 1 vote

மாசலா தூத் | Masala Doodh Recipe In Tamil

டீ காபி குடிக்ககூடாது அப்படின்னு சொல்லுவாங்க ஆனா நம்மளால டீ காபி குடிக்கிறத நிறுத்த முடியலனா அதுக்குஒரு மாற்ற இந்த மசாலா தூத் செய்து குடிக்கலாம். இதை குழந்தைகளுக்கு டெய்லி கொடுத்தாஅவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பெரியவங்களுக்கும் இதை கொடுத்தா குடிக்கிறதுக்குரொம்ப டேஸ்ட்டா அதே நேரத்துல ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும். ஒரு தடவை செஞ்சு உங்கவீட்டுல இந்த டேஸ்ட் காட்டிட்டிங்கனா போதும் அதுக்கப்புறம் அவங்களே திரும்பத் திரும்பவேண்டும் என்று கேட்பார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Masala Dhoodh
Yield: 4
Calories: 281kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 10 முந்திரி
  • 10 பாதாம்
  • 10 பிஸ்தா
  • 1 துண்டு சுக்கு
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள்ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  • 1 டேபிள்ஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்கள்
  • 1/4 லிட்டர் பால்
  • 1 சிறிய ஜாதிக்காய்
  • 2 ஏலக்காய்

செய்முறை

  • ஒரு கடாயில் முந்திரி பாதாம் மற்றும் ஏழு பிஸ்தா சேர்த்து கலர் மாறும் வரை லேசாக வறுத்துக் கொள்ளவும்
  • அதனை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதே கடாயில் சுக்கு ஜாதிக்காய் ஏலக்காய் ரோஜா இதழ்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்து அனைத்தையும் ஆற வைத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் நாட்டு சர்க்கரை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கொதிக்க வைத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து பத்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்
  • இறுதியாக பிஸ்தாவை பொடியாக்கி சேர்த்து இறக்கினால் சுவையான மசாலா தூத் தயார்.

Nutrition

Serving: 150g | Calories: 281kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 32mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!