Home டீ புத்துணர்ச்சி பெற புதினா டீ போட்டு குடிங்க

புத்துணர்ச்சி பெற புதினா டீ போட்டு குடிங்க

பிரியாணியா நம்ம எப்படி மோஷன் அப்படின்னு சொல்றோமோ அதே மாதிரி டீ காப்பியும் எமோஷன் தான். டீக்கடையில உட்கார்ந்து எல்லார்கிட்டயும் பேசிக்கிட்டே ஜாலியா டீ குடிக்கிறதுல ஒரு தனி சந்தோஷம் இருக்கு அப்படின்னு சொல்லலாம். வீட்லயும் கூட நம்ம ஏதாவது டயர்டா பீல் பண்ணாலும் இல்ல தலைவலி வந்தாலும் பசி வந்தாலும் நம்ம தேடுற ஒன்னு தான் இந்த டீ.

-விளம்பரம்-

இந்த மாதிரி நம்ம தினசரி வாழ்க்கையில நம்ம கூடயே இருக்கிற ஒன்று என்றால் அது டீயும் காபியும் தான். ஒரு சில நேரம் தாங்க முடியாத தலைவலி இருமல் சளி இதெல்லாமே வந்தா நம்ம ஒவ்வொரு ஃப்ளேவர்ல டீ போட்டு குடிப்போம். டீல பல விதங்கள் இருக்கு இஞ்சி டீ ஏலக்காய் டீ மசாலா டீ அப்படின்னு எக்கச்சக்கமா சொல்லிக்கிட்டே போகலாம் நமக்கு ஒவ்வொரு தடவையும் எந்த மாதிரி பிளேவரில் டீ குடிக்கணும் அப்படின்னு தோணுதோ அந்த பிளேவர்ல டீ குடிப்போம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம நம்மள எப்பவுமே புத்துணர்ச்சியா வச்சுக்க கூடிய புதினா டீ தான் பார்க்க போறோம்.

இந்த புதினா டீ போட்டு குடிச்சோம் அப்படின்னா அந்த நாள் ஃபுல்லாவே நம்ம புத்துணர்ச்சியோட இருக்கலாம். ஒரு சில நேரங்களில் நமக்கு ரொம்ப தாங்க முடியாத அளவுக்கு தலைவலியோ இல்ல சோம்பேறித்தனமாவோ டயர்டாவோ இருந்தா இந்த புதினா டீய குடிச்சா ரொம்ப சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். ஈஸியா வீட்டிலேயே போடக்கூடிய இந்த புதினா டீய பத்து நிமிஷத்துல போட்டு முடித்து விடலாம். இனிமேல் தலைவரையும் சோம்பேறித்தனமோ வந்தா மாத்திரை எதுவும் போடாம இந்த டீ போட்டு குடிச்சு பாருங்க கண்டிப்பா சரியாகிவிடும் இப்ப வாங்க இந்த சுவையான புதினா டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
2.50 from 2 votes

புதினா டீ | Pudhina Tea Recipe In Tamil

புதினா டீ போட்டு குடிச்சோம் அப்படின்னா அந்த நாள்ஃபுல்லாவே நம்ம புத்துணர்ச்சியோட இருக்கலாம். ஒரு சில நேரங்களில் நமக்கு ரொம்ப தாங்கமுடியாத அளவுக்கு தலைவலியோ இல்ல சோம்பேறித்தனமாவோ டயர்டாவோ இருந்தா இந்த புதினா டீயகுடிச்சா ரொம்ப சுறுசுறுப்பாக வேலை பார்க்க முடியும். ஈஸியா வீட்டிலேயே போடக்கூடியஇந்த புதினா டீய பத்து நிமிஷத்துல போட்டு முடித்து விடலாம். இனிமேல் தலைவரையும் சோம்பேறித்தனமோவந்தா மாத்திரை எதுவும் போடாம இந்த டீ போட்டு குடிச்சு பாருங்க கண்டிப்பா சரியாகிவிடும்இப்ப வாங்க இந்த சுவையான புதினா டீ எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: pudina tea
Yield: 4
Calories: 306kcal

Equipment

  • 1 பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 2 டம்ளர் பால்
  • 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  • 1 கைப்பிடி புதினா இலைகள்
  • 2 டீஸ்பூன் டீ தூள்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்
  • பிறகு அதில் டீ தூள் சர்க்கரையை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து அதனையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சுவையான புதினா டீ தயார்

Nutrition

Serving: 100g | Calories: 306kcal | Carbohydrates: 60g | Protein: 8g | Fat: 1g | Sodium: 11.7mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : அடிக்கிற வெயிலுக்கு டீ பிரியர்கள் மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!