Advertisement
சைவம்

நாவில் எச்சி ஊறும் மசாலா இட்லி செய்வது எப்படி ?

Advertisement

வீட்டில் எப்போதும் வழக்கம் போல இட்லி, தோசை, மற்றும் சப்பாத்தி என்று இதையை தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நீங்கள் வித்தியாசமான முறையில் இட்லி மாவை வைத்து சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த மசாலா இட்லியை முயற்சி செய்து பாருங்கள். இந்த மசாலா இட்லியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : தாருமாறான மசாலா பொங்கல் செய்வது எப்படி ?

Advertisement

இதில் சுவைக்கும் , ரூசிக்கும் கூட பஞ்சம்மில்லை என்று சொல்லாம் அந்த அளவுக்கு இந்த மசாலா இட்லி பிரமாதமா இருக்கும். இன்று இந்த மசாலா இட்லியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

மசாலா இட்லி | Masala Idly Recipe in Tamil

Print Recipe
வீட்டில் எப்போதும் வழக்கம் போல இட்லி, தோசை, மற்றும் சப்பாத்தி என்று இதையை தொடர்ந்து சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நீங்கள் வித்தியாசமான முறையில் இட்லி மாவை வைத்து சாப்பிட நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் இந்த மசாலா இட்லியை முயற்சி செய்து பாருங்கள். இந்த மசாலா இட்லியை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களுக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கும். இதில் சுவைக்கும் , ரூசிக்கும் கூட பஞ்சம்மில்லை என்று சொல்லாம் அந்த அளவுக்கு இந்த மசாலா இட்லி பிரமாதமா இருக்கும். இன்று இந்த மசாலா இட்லியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம்
Course Idly
Cuisine Indian, TAMIL
Keyword Masala Idly, மசாலா இட்லி
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 2 Person
Calories 40

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பவுள்

Ingredients

  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp வெண்ணெய்
  • 1 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp மிளகாய்த் தூள்
  • 2 tbsp இட்லி பொடி
  • ½ tbsp மல்லித்தூள்
  • ½ tbsp உப்பு
  • 2 tbsp தண்ணீர்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடேறியதும் கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் பின் எண்ணெய் சூடேறியதும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை அதில் போடவும்.
  • பின் இதனுடன் வெண்ணையையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் பச்சை மிளகாயை சிறுது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்பு இதனுடன் இரண்டு
    Advertisement
    தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு தக்காளி நன்றாக மசிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும் தக்காளி மசிந்து வந்ததும்.
  • பின்பு அதில் மஞ்சள் தூள், இட்லி பொடி, மல்லித்தூள், உப்பு, மற்றும் இரண்டு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் இதனுடன் சிறிது கொத்தமல்லியை தூவி நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அடுத்து இப்படி நாம் வதக்கிய மசாலாவை தனியாக ஒரு பவுளில் எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த மசாலாவை ஒரு குழி கரண்டி எடுத்து தோசை கல்லில் வைத்து. மாசால மூழ்கும் வரை இட்லி மாவை அதன் மேல் ஊற்றவும்.
  • மசாலாவின் மேல் இட்லி மாவை ஊற்றியதும் மாவின் மேல் இட்லி பொடியை தூவி சிறிது கொத்தமல்லியும் தூவி, வெண்ணையையும் சேர்த்து கொள்ளவும். பின்பு அடிப்பகுதியில் இட்லி நன்றாக வெந்தவுடன் அடுத்த பக்கமும் திருப்பி போட்டுக் கொள்ளவும்.
  • இட்லி இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்து வந்ததும் தோசை கல்லில் இருந்து எடுத்துக் கொள்ளவும். இப்படியாக மீதி இருக்கும் மசாலாவையும் கல்லில் வைத்து இட்லி மாவை மேல் ஊற்றி மசாலா இட்லியை தயார் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் அதிக சுவையும் ரூசியும் கொண்ட மசாலா இட்லி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Calories: 40kcal | Carbohydrates: 5g | Protein: 3g | Fiber: 6g

English Overview: masala idly is one of the most important dishes in south india. masala idly recipe or masala idly seivathu eppadi or masala idly recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

1 மணி நேரம் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

1 மணி நேரம் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

3 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

3 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

6 மணி நேரங்கள் ago