பொதுவாக நாம் காலையில் இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் காலையில் உட்கொள்வோம். ஆனால் இப்படி ஒரு சுழற்சி முறையில் மாறி மாறி இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமக்கே சலித்து போய்விடும் ஆகையால் புதுமையாக இனி மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையில் இந்த மசாலா பொங்கலை வைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் வீட்டில்
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் கார பொங்கல் செய்வது எப்படி ?
உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடித்தமான உணவாக மாறிவிடும் விரும்பி சாப்பிடுவார்கள். அதன்பின்பு உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி மசாலா பொங்கலை செய்து தரச் சொல்லி கேட்பார்கள் தரமான ருசியில் இருக்கும். இன்று மசாலா பொங்கலை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் இன்று காணலாம்.
மசாலா பொங்கல் | Masala Pongal Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
குக்கரில் வேக வைக்க
- 1 கப் பச்சரிசி
- ½ கப் பாசி பருப்பு
- 2 tbsp உப்பு
- ½ tbsp மஞ்சள் தூள்
- 2 தக்காளி நறுக்கியது
- 3 கப் தண்ணீர்
பொங்கலுக்கு மசாலா
- 3 tbsp எண்ணெய்
- 1 ½ tbsp நெய்
- 1 tbsp கடுகு
- 1 tbsp சீரகம்
- 1 tbsp மிளகு
- 2 பச்சை மிளகாய்
- 1 tbsp இஞ்சி நறுக்கியது
- 3 tbsp முந்திரி
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- ½ tbsp பெருங்காயத்தூள்
- கருவேப்பிலை சிறிது
- 1 ½ tbsp மல்லித்தூள்
- 2 tbsp மிளகாய்த் தூள்
- 4 tbsp துருவிய தேங்காய்
- 2 கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொண்டு அதில் பச்ச ரிசி பாசி பருப்பு உப்பு மஞ்சள் தூள் தக்காளி பழம் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- பின்பு குக்கரில் இரண்டு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி வைத்து விடுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- பிறகு எண்ணெய் சூடு ஏறியதும் அதில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு இதனுடன் முந்திரியையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பெருங்காயத்தூள் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- அதன் பின்பு இதனுடன் மல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும் நன்றாக மசாலா வதக்கியவுடன் துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளவும் தேங்காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- அதன் பின் நன்றாக மசாலா கொதித்தவுடன் நம் குக்கரில் வேகவைத்த பச்சரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கொலையுமாறு கிளறி விடவும்.
- பின்பு இது தேவையான அளவு உப்பு சேர்த்து நாம் வைத்திருக்கும் கொத்தமல்லியை சிறிது சிறிதாக வெற்றி தூவி விடுங்கள் அவ்வளவுதான் மசாலா பொங்கல் இனிதே தயாராகி விட்டது.