நீங்கள் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடுவதற்கு வழக்கம் போல் இட்லி தோசை என்ன செய்வதற்கு பதில் இது போன்று சுவையான கார பொங்கல் ரெசிபியை செய்து சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த காரப்பொங்கல்
இதையும் படியுங்கள் : தாருமாறான ரூசியில் ரவா பொங்கல் செய்வது எப்படி ?
அற்புதமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபி உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு டிபன் ரெசிபியாக மாறிவிடும் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள். அதனால் இன்று இந்த சுவையான கார பொங்கல் ரெசிபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கார பொங்கல் | Kara Pongal Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி
- ½ கப் பாசி பருப்பு
- 1 கப் பால்
- 1 கப் துருவிய தேங்காய்
- 5 tbsp நெய்
- 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 5 கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- 1 tbsp சீரகம்
- 5 பச்சை மிளகாய்
- 1 tbsp மிளகு
- 1 கொத்து கருவேப்பிலை
- ¼ tbsp மஞ்சள் தூள்
- 6 முந்திரி பருப்பு
செய்முறை
- முதலில் மேலே கொடுத்துள்ள அளவில் அரிசி மற்றும் பருப்பு எடுத்து இரண்டு மூன்று முறை நன்றாக அலசி கொள்ளவும். பின் கழுவிய அரிசி பருப்பை ஒரு குக்கரில் சேர்த்து தேயைான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- பின் விசில் வந்ததும் குக்கரை இறக்கி வேக வைத்த அரிசி பருப்பை நன்றாக மசித்து கொண்டு பின் அதில் நாம் வைத்திருக்கும் ஒரு கப் அளவு துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
- பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் ஊற்றி நெய் காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து வறுத்து பின் இதனுடன் பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்
- பின் முந்திரி பருப்பு பொன்னிறமாக வதங்கி வந்ததும் அதில் மிளகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து வதக்கவும். பின் தாளித்த பொருட்கள் மற்றும் ஒரு டம்ளர் பால் சேர்த்து வேக வைத்த அரிசியில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
- பின் கார பொங்கல் கெட்டியாக பதத்தில் இருந்தால் இதனுடன் தண்ணீர் அல்லது கூடுதல் பால் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு தேவைக்கேற்ப உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து பறிமாறவும். அவ்வளவு தான் சவையான கார பொங்கள் தயார்.