மாலை வேளையில் காரசாரமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த மசாலா மக்கானாவை செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் மக்கானாவால் செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் மக்கானா இருந்தால், அதைக் கொண்டு மசாலா மக்கானா செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவ

By Prem Kumar · 2/4/2026

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் மக்கானாவால் செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் மக்கானா இருந்தால், அதைக் கொண்டு மசாலா மக்கானா செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் இந்த மசாலா மக்கானாவும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். பொதுவாக எந்த மசாலா உணவுனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர்.

அப்படிப்பட்ட மசாலா வகையில் ஒன்றான மசாலா மக்கானா ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். மசாலா மக்கானா என்பது வறுத்த தாமரை விதைகள் ஆகும். இது தாமரை விதைகள் மற்றும் உலர் மசாலாக்களை கொண்டு செய்யப்படும் ஈசியாான எளிமையான மற்றும் ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் ரெசிபி ஆகும். இது பொதுவாக நவராத்திரி நோன்பு நாட்களில் வடமாநிலங்களில் செய்யப்படும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ் வகை. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இதனை செய்யலாம். இந்த ரெசிபியைச் செய்வதற்கு அதிகப் பொருட்கள் தேவையில்லை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிதாக செய்து முடித்து விடலாம்.

எளிதாக செய்யக்கூடிய இந்த மசாலா மக்கானா சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. மக்கானா எனப்படும் தாமரை விதை காயிலிருந்து பெறப்படும் மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை விதையாகும். இதைப் பயன்படுத்தி செய்யப்படும் சிற்றுண்டி ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இந்த மக்கானாவில் ஒரு முறை மசாலா மக்கானா செய்து பாருங்கள். வாருங்கள் இப்போது சுவையான மசாலா மக்கானா எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : காரஎாரமான ருசியில் சூப்பரான மக்கானா உருளைக்கிழங்கு கிரேவி இப்படி ட்ரை செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full