காரஎாரமான ருசியில் சூப்பரான மக்கானா உருளைக்கிழங்கு கிரேவி இப்படி ட்ரை செய்து பாருங்க!

- Advertisement -

மக்கானா என்பது தாமரையின் விதைகள். இதை ஆங்கிலத்தில் fox nuts என்றும் அழைப்பார்கள். தாமரை விதை என்றும் அழைக்கப்படும் மக்கானா வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் வட இந்தியர்களால் சிற்றுண்டி நேரங்களில் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தென்னிந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் கலோரி அளவு மிக மிக குறைவு. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த மக்கானாவை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக வேகமாக எடையைக் குறைக்க முடியும். இந்த தாமரை விதை கிரேவி சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையான கிரேவி ஆகும். பன்னீர் பட்டர் மசாலா போலவே தாமரை விதை கறியும் ரொம்பவே சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

நவராத்திரி, தீபாவளி போன்ற விரதமிருக்கும் பண்டிகை நாட்களில் இந்த ரெசிபி பொதுவாக செய்யப்படுகிறது. தாமரை விதைகளில் இருக்கக்கூடிய மெக்னீசியம் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் பொட்டாசியம் மற்றும் சோடியமும் உள்ளன. இதனால் ரத்த அழுத்தம் சீராகி ஆரோக்கியம் காக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம் கொண்ட இந்த மக்கானா நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பெரும்பாலானவர்கள் இந்த தாமரை விதைகளை வைத்து வெறுமனே பொரி போல வறுத்து மசாலா சேர்த்து எடுத்துக் கொள்கிறார்கள். ஒரே மாதிரி எடுத்துக் கொள்வதால் அனைவருக்கும் இது சலித்துப் போகலாம். அதனால் அருமையான சுவையில் எப்படி உருளைக்கிழங்கு தாமரை விதை கிரேவி செய்து என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

மக்கானா உருளைக்கிழங்கு கிரேவி | Makhana Potato Gravy Recipe In Tamil

மக்கானா என்பது தாமரையின் விதைகள். இதை ஆங்கிலத்தில் fox nuts என்றும் அழைப்பார்கள். தாமரை விதை என்றும் அழைக்கப்படும் மக்கானா வெள்ளை நிறத்தில் இருக்கும். இது பெரும்பாலும் வட இந்தியர்களால் சிற்றுண்டி நேரங்களில் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தென்னிந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் கலோரி அளவு மிக மிக குறைவு. அதனால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த மக்கானாவை எடுத்துக் கொள்வதன் மூலம் மிக வேகமாக எடையைக் குறைக்க முடியும். இந்த தாமரை விதை கிரேவி சப்பாத்தி மற்றும் சூடான சாதத்துடன் தொட்டு சாப்பிட அருமையான கிரேவி ஆகும். பன்னீர் பட்டர் மசாலா போலவே தாமரை விதை கறியும் ரொம்பவே சுவையாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner
Cuisine: Indian
Keyword: Makhana Potato Gravy
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் மக்கானா
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் தனியா தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 2 பச்சை மிளகாய்

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் மக்கானாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போக வதக்கவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இது கொதிக்க ஆரம்பித்ததும் மக்கானா மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • இந்த கிரேவி நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் பிரியாணி மசாலா, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மக்கானா உருளைக்கிழங்கு கிரேவி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 6.4g | Fat: 2g | Sodium: 18mg | Potassium: 620mg | Fiber: 4g | Vitamin A: 49IU | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 5.8mg

இதனையும் படியுங்கள் : சப்பாத்திக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு சப்பாத்தி கூட சாப்பிட வாங்க!