- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
பொதுவான சப்பாத்திக்கு நல்லா சைடிஷ் வைத்து சாப்பிடணும் அப்படின்னு நினைப்போம். இந்த வகையில பட்டர் சிக்கன், பன்னீர் பட்டர் மசாலா, உருளைக்கிழங்கு மசாலா, தக்காளி தொக்கு, தக்காளி குருமா அப்படின்னு நிறைய சைட் டிஷ் வச்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நம்ம வைக்கப் போற இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா ஒரு தடவ செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் நீங்க வீட்ல எப்போ சப்பாத்தி செஞ்சாலும் இந்த மசாலா தான் செஞ்சு சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.
இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவ சப்பாத்திக்கு மட்டுமில்லாம பூரி இட்லி தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்கும் வச்சு சாப்பிடலாம் அட்டகாசமான ஒரு சைட் டிஷ்ஷா இருக்கும். இந்த வெயில் காலத்துக்கு வீட்ல தயிர் சாதம் செஞ்சா அதுக்கும் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலாவை சைட் டிஷ்ஷா வைத்து சாப்பிடலாம். சாப்பிடுற சாப்பாட்டு ஊட்டி விடும் அப்படின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் தான் இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா.
சின்ன குழந்தைகளுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க. வீட்டுக்கு விருந்தாளி வந்தா கூட அவங்களுக்கும் நீங்க ஏதாவது செஞ்சு கொடுக்கலாம். உங்கள கண்டிப்பா பாராட்டுவாங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கக்கூடிய ரொம்ப ஈஸியா செய்யக்கூடிய இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் சோம்பு பட்டை கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
பிறகு அதில் பூண்டு மற்றும் இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்து கொள்ளவும்
பிறகு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை மிளகாயும் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவும்
சீரகத்தூள் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் உருளைக்கிழங்கை கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
பச்சை பட்டாணியையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரம் மசாலா சேர்த்து நன்றாக பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
இறுதியாக வெண்ணெய் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா தயார்






