Advertisement
உடல்நலம்

உமிழ்நீர் சுரக்க வைத்து வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அற்புத மூலிகைக் காய்!

Advertisement

மாசிக்காய்… உங்கள்ல பலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சிலபேருக்கு மாசிக்காயோட பேரைக்கூட சொல்லத்தெரியாது. சில பேர் இதை மாயக்காய்னு சொல்வாங்க. மாயக்காய்னு சொல்றதுக்கு காரணம் இந்தக்காய் நிறைய மாய வித்தைகளை செய்யும்னுகூட சொல்லலாம். வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவங்க மாசிக்காயை உடைச்சி மிளகளவு எடுத்து வாயில போட்டு சாப்பிட்டாலே காலப்போக்குல அந்தப்பிரச்சினை சரியாயிரும். சர்க்கரை நோயாளிகளுக்கு உடம்புல எங்கயாவது அடிபட்டா புண் வந்து அது ஆறாது. அதுக்கு மாசிக்காய் ரொம்ப நல்லது. முக்கியமா குழிப்புண் வந்து அது ஆறாம புண் புரையோடிப்போய் சம்பந்தப்பட்ட இடத்துல சில பகுதிகளை வெட்டி எடுக்க வேண்டியிருக்கும். அந்தமாதிரி நேரங்கள்ல மாசிக்காயை தண்ணி விட்டு உரசி அந்த இடத்துல தடவுனா சரியாயிரும்.

கட்டியை கரைக்கும்

சர்க்கரை நோய் உள்ள ஒருத்தருக்கு முதுகுப்பகுதியில கட்டி வந்து சிரமப்பட்டார். டாக்டரை போய் பார்த்ததும் அறுவை சிகிச்சைதான் தீர்வுன்னு சொல்லிட்டாங்க. ஆனா அவர் தொடர்ந்து மாசிக்காயை உரசிப்போட்டு முதுகுப்பகுதியில வந்த கட்டியை குணப்படுத்திட்டார். அறுவை சிகிச்சைக்கு 10 ஆயிரம் ரூபாய் செலவாகும்னு சொன்னாங்களாம். ஆனா, அவர் மாசிக்காய்க்கு செலவு செஞ்சது வெறும் 50 ரூபாய்தான். இந்த மாதிரி ரொம்ப சாதாரணமா பலன் பெற்று தரக்கூடியது மாசிக்காய். இதேமாதிரி உடல் உறுப்புகள்ல சாதாரணமா வரக்கூடிய புண்களை சரிபண்றதுக்கும் மாசிக்காயை உரசி தடவுனா போதும்.

Advertisement

வெள்ளைப்படுதல் போக்கும்

மூல நோய்க்குக்கூட மாசிக்காய் நல்ல மருந்துதான். மூலத்துக்கு பலவகை இருந்தாலும் அதுக்கு மாசிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். மாசிக்காயை உடைச்சி தண்ணி விட்டு கொதிக்க வச்சி ஆற வச்சு அந்த இடத்தை கழுவுனாலும் பிரச்சினை சரியாகும். முக்கியமா பெண்களை பாடாய்ப்படுத்தி எடுத்துட்டு வரக்கூடிய பிரச்சினைகள்ல ஒண்ணு வெள்ளைப்படுதல். அதுக்குக்கூட மாசிக்காயை கொதிக்க வச்சி ஆற வச்சு கழுவலாம். சில பேருக்கு மூக்குல

Advertisement
ரத்தம் வடியக்கூடிய பிரச்சினை இருக்கும். அதுக்கும்கூட மூக்குப்பொடி போடுற மாதிரி போட்டுட்டு வந்தாலும் பிரச்சினை சரியாயிரும். உடல் சூட்டை குறைக்கிறதுக்கு மாசிக்காய் சாப்பிட்டா போதும்.

உரை மருந்து

குழந்தைகளுக்கு வரக்கூடிய உடல் சூட்டை கணைச்சூடுன்னு சொல்வாங்க. அந்தப் பிரச்சினைக்கும்கூட மாசிக்காய் சாப்பிட கொடுக்கலாம். சின்ன வயசுல குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பாங்க. அப்போ

Advertisement
ஜாதிக்காய், கடுக்காய், சுக்கு, மிளகு மாதிரி சில பொருள்களை உரசி கொடுப்பாங்க. இதை உரை மருந்துன்னு சொல்வாங்க. இந்தப் பொருள்களோட மாசிக்காயையும் சேர்த்துக் கொடுப்பாங்க. இந்த மாதிரி கொடுத்துட்டு வந்தா நிறைய பிரச்சினைகள் சரியாகும். இன்னைக்கி சூழல்ல உரை மருந்துகளை கொடுக்கிறதுக்கு குறைஞ்சி போச்சு. இந்த உரை மருந்துக்கு பல நோய்களை வரவிடாம தடுக்கக்கூடிய சக்தி இருக்கு. அதனால குழந்தை பெற்றவங்க இதை முயற்சி பண்றது நல்லது.

உமிழ்நீர் சுரக்க வைக்கும்

உமிழ்நீரை சுரக்க வைக்கிறதுக்கும்கூட மாசிக்காய் ரொம்பவே உதவியா இருக்கும். இன்னைக்கு சூழல்ல பல பேர் உமிழ்நீர் சுரக்காம சிரமப்படுறாங்க. அதுக்கு மாசிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். இதைச் சாப்பிடுறதால செரிமானக்கோளாறு பிரச்சினைகளும் சரியாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் புண் பிரச்சினையை சரிபண்ண மாசிக்காய் ரொம்ப நல்ல மருந்து. மாசிக்காயை உடைச்சி மிளகு அளவு சாப்பிட்டு வந்தாலே போதும். வயிற்றுப்போக்கு பிரச்சினையால அவதிப்பட்ட ஒருத்தர் மாசிக்காயை சாப்பிட்டே அவரோட பிரச்சினையை சரிபண்ணிட்டார். இந்தமாதிரி மாசிக்காய் பல பிரச்சினைகளை சரிபண்ணும். நல்லது செய்றதுங்கிறதுக்காக அதிகமா சாப்பிடக்கூடாது. அதேநேரத்துல மருத்துவர்கிட்ட ஆலோசனை பண்ணி சாப்பிடுறது நல்லது.

Advertisement
Maria Bellsin

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

9 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

9 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

9 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

10 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

10 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

14 மணி நேரங்கள் ago