Home சைவம் ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம...

ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க!

காலை உணவை சத்து உள்ளதாக மாற்ற, இந்த சிறுதானிய அடையை எடுத்துக் கொள்ளுங்கள்.. அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாட்கள் இந்த சிறுதானிய அடை தோசை செய்து சாப்பிடலாம். அரிசி சேர்க்காமல் சிறுதானியம் சேர்த்து சூப்பரான ருசியான அடை சுடுவது சுலபம். இந்த அடை தோசைக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, அவியல், சாம்பார் எது வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

-விளம்பரம்-

ஆரோக்கியம் நிறைந்த நவதானிய அடை தோசை ஒரு முறை உங்க வீட்ல இப்படி சுட்டு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். முன்பெல்லாம் சமையலில் சிறுதானியங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள். இன்று சிறுதானியங்கள் என்றால் என்ன? என்று நம் பிள்ளைகள் கேட்கிறது. சுவைக்காக மட்டுமே சாப்பிட்டு பழக்கப்பட்ட நமக்கு, வெறும் ஆரோக்கியத்தை மட்டுமே தரும் இந்த சிறுதானியங்களை பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் வயதான பெரியவர்கள் கூட, நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக நன்றாக வேலை செய்து வந்தார்கள்.  இதற்கு காரணம் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்தான உணவு எதுவும் கிடைப்பதில்லை. அதனால் இனியாவது ஏதாவது ஒரு சிறு தானியத்தை தினமும் கட்டாயமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் இன்று இந்த சிறுதானிய  அடையை பற்றி தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

சிறுதானிய அடை | Millets Adai Recipe In Tamil

ஆரோக்கியம் நிறைந்த நவதானிய அடைதோசை ஒரு முறை உங்க வீட்ல இப்படி சுட்டு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாகசாப்பிடுவார்கள். முன்பெல்லாம் சமையலில் சிறுதானியங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தார்கள்.இன்று சிறுதானியங்கள் என்றால் என்ன? என்று நம் பிள்ளைகள் கேட்கிறது. சுவைக்காக மட்டுமேசாப்பிட்டு பழக்கப்பட்ட நமக்கு, வெறும் ஆரோக்கியத்தை மட்டுமே தரும் இந்த சிறுதானியங்களைபற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் வயதான பெரியவர்கள் கூட,நல்ல ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக நன்றாக வேலை செய்து வந்தார்கள். 
Prep Time4 hours 5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Millets Adai
Yield: 4

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் வரகு மாவு
  • 1/2 கப் குதிரைவாலி மாவு
  • 1/2 கப் தினை மாவு
  • 1/2 கப் சாமை மாவு
  • 1/2 கப் கம்பு மாவு       
  • 1/2 கப் கேழ்வரகு மாவு
  • 1/2 கப் மாப்பிள்ளை சம்பா
  • 1/2 கப் அரிசி மாவு
  • 1/2 கப் பச்சைப்பயறு மாவு
  • 1/2 கப் கவுனி அரிசி மாவு
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1 கைப்பிடி முருங்கைக்கீரை
  • 5 பச்சை மிளகாய்
  • 1 கைப்பிடி கொத்துமல்லி
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு சிறிதளவு
  • 100 மில்லி நல்லெண்ணெய்

செய்முறை

  • வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிவையைச் சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள்
  • அனைத்து மாவுகளையும் ஒன்றாகச் சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, கீரை ஆகியவற்றையும் போட்டு தேவையான உப்பு போட்டு சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளுங்கள்
  • பிசையும் போதுசிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மாவு இதமாக வரும். பிறகு இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துவைத்துக் கொள்ளுங்கள்
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து. உருண்டையை வட்டமாகத் தட்டி, சிறிதளவு நல்லெண்ணெய் விரவி இருபுறமும் திருப்பி நன்கு வேகவிட்டு எடுங்கள். தானிய அடை தயார்