Advertisement
ஸ்வீட்ஸ்

வீட்டில் சிறுதானியம் இருந்தால் போதும் பிரமாதமாக இப்படி சிறுதானிய லட்டு செய்யலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் சிறுதானியம் பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இந்த சிறுதானியத்தை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் சிறுதானிய லட்டு செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட.

சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த சிறுதானிய லட்டு உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது. சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் லட்டு எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம். இந்த சிறுதானிய லட்டு சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த லட்டுவை செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது இதை உணவாக செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.

Advertisement

சிறுதானிய லட்டு | Millets Laddu Recipe In Tamil

Print Recipe
பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் சிறுதானியம் பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இந்த சிறுதானியத்தை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் சிறுதானிய லட்டு செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட.
Advertisement
சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த சிறுதானிய லட்டு உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது.
Course sweets
Cuisine Indian
Keyword Millets Laddu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/4 கப் தினை
  • 1/4 கப் சாமை
  • 1/4 கப் கொள்ளு
  • 1/4 கப் கேழ்வரகு
  • 1/4 கப் கம்பு
  • 2 கப் நாட்டு சர்க்கரை
  • 1/4 கப் பாதாம்
  • 1/4 கப் வால்நட்
  • 1/2 கப் முந்திரி
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சுக்கு பொடி
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் தினை, கொள்ளு, சாமை, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தினை, கொள்ளு, சாமை, கம்பு, கேழ்வரகு தண்ணீர் வடித்து சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் முந்திரி, பாதாம், வால் நட்ஸ் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் சிறுதானியங்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் முந்திரி, பாதாம், வால் நட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு பவுளில் அரைத்த மாவு மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து நன்கு கலந்து அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இந்த சிறுதானிய லட்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன்மேல் நட்ஸ் வைத்து அலங்கரித்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய லட்டு தயார்.

Nutrition

Serving: 500g | Carbohydrates: 6.2g | Protein: 11.8g | Fat: 4.3g | Saturated Fat: 1.5g | Sodium: 28mg | Potassium: 260mg | Fiber: 8g | Sugar: 2.5g | Vitamin A: 48IU | Calcium: 41mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

12 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

16 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

19 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago