ருசியான சிறுதானிய பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!
தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்ப
தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சிறுதானிய பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாறபட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது. ‘பெரும்பாலும் மைதா மாவைப் பயன் படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது.
நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது. ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தாவுக்கு பதிலாக கோதுமை அல்லது சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் மாறிவிடும்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் சிறுதானியம் இருந்தால் போதும் பிரமாதமாக இப்படி சிறுதானிய லட்டு செய்யலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!