Advertisement
சைவம்

கிராமத்து மணம் மாறாமல் மொச்சை கத்திரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க! மீண்டும் வைக்க தோன்றும் சுவையில்!

Advertisement

மொச்சைக்கொட்டையும் கத்திரிக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு செய்து சுட சுட சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் இந்த மொச்சை கத்தரிக்காய் குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால்

இதையும் படியுங்கள் : சுவையான கத்தரிக்காய் மிளகு கறி செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அந்த வகையில் கிராமத்து சுவையில் எப்படி செய்யலாம் என்பதை கீழே செய்முறை விளக்கங்கள், தேவையான பொருட்கள் என்ன என்பதை கொடுத்துளோம் படித்துப் பார்த்து நீங்களும் ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

மொச்சை கத்திரிக்காய் குழம்பு | Mochai Kathirikai Kulaambu Recipe In Tamil

Print Recipe
இந்த மொச்சை கத்தரிக்காய் குழம்பை கிரமாத்து பகுதிகளில் வைப்பது போன்றே பக்குவமாக செய்து பார்க்க போகிறோம். இந்த குழம்பை இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஒரு தட்டு சோறும் காலியாகும் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும்.
Course Kulambu, Main Course
Cuisine Indian, TAMIL
Keyword mochai kathirikai kulambu, மொச்சை கத்தரிக்காய் குழம்பு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 60

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 குக்கர்

Ingredients

  • ½ கப் மொச்சை
  • 6 கத்திரிக்காய் பிஞ்சாக
  • 7 பல் பூண்டு
  • 50 கிராம் சின்ன வெங்காயம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 தக்காளி
  • உப்பு தேவைக்கேற்ப
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 மேஜைக்கரண்டி புளிச்சாறு
  • ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்

தாளிக்க:

  • மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • ½ ஸ்பூன் சீரகம்
  • ¼ ஸ்பூன் வெந்தயம்

Instructions

  • முதலில் மொச்சையை 6 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைத்துக்கொள்ளவும்.
  • கத்திரிக்காயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  • அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும். தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்னர் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • கத்திரிக்காய் நிறம் மாறி வதங்கி வரும் போது தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் புளிசாறு, மிளகாய்தூள், மற்றும் 2 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கத்திரிக்காய் வெந்ததும், வேக வைத்த மொச்சையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  • குழம்பு கெட்டியானதும் இறக்கினால் சுவையான மொச்சைக் கத்திரிக்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 500gram | Calories: 60kcal | Carbohydrates: 37g | Protein: 19g | Fat: 2g | Saturated Fat: 0.9g | Cholesterol: 2mg | Sodium: 10mg | Potassium: 83mg | Fiber: 2g | Sugar: 1g
Advertisement
swetha

Recent Posts

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

18 நிமிடங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

3 மணி நேரங்கள் ago

அக்னி நட்சத்திரம் 2024 எப்போது? தேதி, நேரம்.. முழு விவரம் இதோ!

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

3 மணி நேரங்கள் ago

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

5 மணி நேரங்கள் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

6 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

8 மணி நேரங்கள் ago