உங்களுக்கு எப்பொழுதும் எந்த கூட்டு வைப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்து கடைசியில் நீங்கள் தொடர்ந்து வழக்கம் போல் ஒரே மாதிரி வகையான கூட்டு வகைகளையே திருப்பித் திருப்பி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். ஆனால் இன்று நாம் கத்திரிக்காயை வித்தியாசமான முறையில் கறி சுவையில் செய்ய இருக்கிறோம். இன்று கத்திரிக்காய் வைத்து அட்டகாசமான முறையில் கத்திரிக்காய் மிளகு கறி செய்வது பற்றி தான் நான் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படியுங்கள் : சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி ?
ஒரு முறை நீங்கள் உங்கள் வீட்டில் இந்த கத்திரிக்காய் மிளகு கறி செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த கூட்டு மிகவும் பிடித்து போய்விடும். பின் நீங்களே அடிக்கடி இந்த கூட்டை உங்கள் வீட்டில் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். இன்று இந்த கத்திரிக்காய் மிளகு கறி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கத்தரிக்காய் மிளகு கறி | Kathirikai Milagu Kari Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 குழம்பு பாத்திரம்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
அரைக்க
- 4 பல் பூண்டு
- 1 ½ tbsp மிளகு
- 1 tbsp சீரகம்
- தண்ணீர் சிறிது
கூட்டு செய்ய
- 350 கிராம் கத்தரிக்காய்
- 1 ½ tbsp எண்ணெய்
- 1 tbsp கடுகு
- 1 பெரிய வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது
- கருவேப்பிலை சிறிது
- ½ tbsp மஞ்சள் தூள்
- 1 ½ tbsp உப்பு
- 1 கப் தேங்காய் பால்
- கொத்த மல்லி சிறிது
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட 350 கிராம் கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் போட்டு வைக்கவும். பின்பு மிக்ஸியில் நாலு பல் பூண்டு, மிளகு மற்றும் சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
- அதன் பின்பு இதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்துக் கொள்ளவும்.
- கடுகும் நன்றாக பொரித்து வந்ததும் இதனுடன் நீள்வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிய கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
- பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கி கொள்ளவும். அதன் பின்பு இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் அரைத்து வைத்த மிளகு பேஸ்டையும் இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
- கத்தரிக்காய் முக்கால் பதத்திற்கு வதங்கியதும் இதனுடன் தேங்காய் பாலை சேர்த்து வதக்கி கொள்ளவும். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும் சிறிது கொத்த மல்லி தூவி கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் கத்திரிக்காய் மிளகு கறி இனிதே தயாராகிவிட்டது.