- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, chutney, dinner
நம் வீட்டில் காலை உணவு அல்லது இரவு உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் செய்யும் பொழுது. ஒரு சுழற்சி முறையில் தேங்காய் சட்னி, ஒரு சட்னி, மாற்றி மாற்றி வைத்து இந்த இரு சட்னிகளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி வைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்றால் கண்டிப்பாக
இதையும் படியுங்கள் : சுவையான தள்ளுவண்டி கடை சட்னி செய்வது எப்படி ?
இந்த கத்திரிக்காய் சட்னியை செய்து பாருங்கள். கண்டிப்பாக இந்த சட்னி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மிகவும் பிடித்த சட்னியாக மாறி போகும். இந்த கத்திரிககாய் சட்னியை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Ingredients
Method
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு என்னை ஊற்றிக் கொள்ளுங்கள் பின்பு என்னை சூடேறும் வரை காத்திருக்கவும் என்னை சூடு ஏறியவுடன் கருக சீரகம் கருவேப்பிலை பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளவும்.
பின்பு சின்ன வெங்காயம், உரித்து வைத்திருக்கும் பூண்டு இரண்டையும் சேர்த்து வதக்கவும்,வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன்.
நறுக்கி வைத்திருக்கும் தக்காளியும் இதனோடு சேர்த்து வதக்கவும், தக்காளியின் பச்சை வாடை போயி மெண்மையாக வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா வடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
பின்பு உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறி விடவும் பின்பு கத்திரிக்காயையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடுங்கள் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை காத்திருஙகள்.
விசில் வந்தவுடன் குக்கர் ரிஷரை ரிலீஸ் செய்து முடியை திறந்து பருப்பு மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளுங்கள் பின்பு சட்னியை வேறு பாத்திரத்தில் மாற்றி கொள்ளுங்கள்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து கடுகு உளுந்தம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும் தாளித்து முடித்தவுடன் இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து கலக்கி கொள்ளவும் அவ்வளவுதான் கத்திரிக்காய் சட்னி இனிதே தயாராகிவிட்டது.






