Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் மதிய உணவுக்கு ஏற்ற மொச்சைக் குழம்பு இப்படி செய்து பாருங்க!

Advertisement

மொச்சைக் கொட்டையையும் வைத்து ஒரு குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டி சமைத்தது, எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் சுவையில் செய்யக்கூடிய மொச்சைக் குழம்புஎவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

மொச்சைக் குழம்பு | Mochai Kulambu Recipe In Tamil

Print Recipe
மொச்சைக் கொட்டையையும் வைத்து ஒரு குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டி சமைத்தது, எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதை
Advertisement
கேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் சுவையில் செய்யக்கூடிய மொச்சைக்குழம்புஎவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Course Kulambu, LUNCH
Cuisine tamil nadu
Keyword Mochai Kulambu
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 209

Equipment

  • 1 கடாய்
    Advertisement

Ingredients

  • 1/2 கப் மொச்சை
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 கப் பூண்டு
  • புளி எலுமிச்சை அளவு
  • 3 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 டீஸ்பூன் தனியாதூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • மல்லித்தழை சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 4 தக்காளி

 தாளிக்க:

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் எண்ணெய்

Instructions

  • மொச்சையை 6 முதல் 8 மணிநேரம் ஊறவிடுங்கள். பூண்டு, வெங்காயத்தைதோலுரித்து வையுங்கள்.
  • புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை மூன்றையும் அம்மியில் வைத்துத் தட்டிக்கொள்ளுங்கள். மொச்சையை உப்பு சேர்த்துநன்கு வேகவையுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேருங்கள்
  • இது நன்கு வதங்கியதும் தட்டியதை சேர்த்து, மேலும் சிறிதுநேரம் வதக்கிமிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி புளி, உப்பு, மொச்சை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள். நாவைச்சப்புக்கொட்ட வைக்கும் இதன் அபார ருசி.

Nutrition

Serving: 100g | Calories: 209kcal | Carbohydrates: 9.2g | Protein: 2.9g | Fat: 0.3g | Potassium: 262mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

8 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

1 மணி நேரம் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

6 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

6 மணி நேரங்கள் ago