காரசாரமான ருசியில் மதிய உணவுக்கு ஏற்ற மொச்சைக் குழம்பு இப்படி செய்து பாருங்க!

mochai kottai kulambu
- Advertisement -

மொச்சைக் கொட்டையையும் வைத்து ஒரு குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டி சமைத்தது, எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் சுவையில் செய்யக்கூடிய மொச்சைக் குழம்புஎவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

-விளம்பரம்-
mochai kottai kulambu
Print
No ratings yet

மொச்சைக் குழம்பு | Mochai Kulambu Recipe In Tamil

மொச்சைக் கொட்டையையும் வைத்து ஒரு குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ், பிரட் ஜாம் என நகர்ப்புற உணவிற்கு பழகிவிட்டாலும் சில சமயங்களில் ஊரில் எங்கள் பாட்டி சமைத்தது, எவ்வளவு ருசியாக இருக்கும் தெரியுமா? என்று பலர் கூறுவதை கேட்டிருப்போம். இவ்வாறான மனதில் நிற்கும் சுவையில் செய்யக்கூடிய மொச்சைக்குழம்புஎவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Kulambu, LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Mochai Kulambu
Yield: 4
Calories: 209kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் மொச்சை
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 1/2 கப் பூண்டு
  • புளி எலுமிச்சை அளவு
  • 3 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 டீஸ்பூன் தனியாதூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • மல்லித்தழை சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 4 தக்காளி

 தாளிக்க:

  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் எண்ணெய்

செய்முறை

  • மொச்சையை 6 முதல் 8 மணிநேரம் ஊறவிடுங்கள். பூண்டு, வெங்காயத்தைதோலுரித்து வையுங்கள்.
  • புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை மூன்றையும் அம்மியில் வைத்துத் தட்டிக்கொள்ளுங்கள். மொச்சையை உப்பு சேர்த்துநன்கு வேகவையுங்கள்.
  • எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேருங்கள்
  • இது நன்கு வதங்கியதும் தட்டியதை சேர்த்து, மேலும் சிறிதுநேரம் வதக்கிமிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி புளி, உப்பு, மொச்சை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள். நாவைச்சப்புக்கொட்ட வைக்கும் இதன் அபார ருசி.

Nutrition

Serving: 100g | Calories: 209kcal | Carbohydrates: 9.2g | Protein: 2.9g | Fat: 0.3g | Potassium: 262mg
- Advertisement -