இவை 3 வெறும் செடிகள் அல்ல உங்கள் வீட்டிற்கு செல்வம் மற்றும் பணம் தரும் பொக்கிஷம்!

- Advertisement -

ஆரோக்கியம் தரும் மூலிகை செடிகளை வீட்டில் வளர்க்கின்றோம். அப்படிப்பட்ட மூலிகை செடிகள் வெறும் ஆரோக்கியம் மட்டும் தருகின்றனவா? நம் மூலிகைச் செடிகளை எத்துசையில் வைத்து வளர்த்தால் சரியான நல்ல பலன்கள் கிடைக்கும். வரவு செல்வ செழிப்பு ஆரோக்கியம் இப்படி பல நன்மைகளை இந்த செடிகள் கொடுக்கின்றன. அப்படிபட்ட மூலிகை செடிகளை இப்படி வைத்து வளர்த்தால் பலன்கள் பல மடங்கா கிடைக்கும். வெறும் ஆரோக்கியத்திற்காக வளர்க்கப்பட்ட செடிகள் எல்லாம் இப்பொழுது செல்வ வளத்தை கொடுப்பதற்கு எப்படி வைத்து வளர்க்க வேண்டும் ..எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். இப்படிப்பட்ட மூலிகை செடிகளின் முக்கியமானவை துளசியும் கற்பூரவள்ளியும் இவை இரண்டும் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகின்றன. நாம் வெளியில் செல்லும்பொழுது இச்சடிகளை பார்த்து சென்றாலே பல நன்மைகள் கிடைக்கும்அப்படிப்பட்ட செடிகளை சரியான திசையில் வைத்து வழிபட்டு வந்தால் எந்த மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பது தெரிந்துகொள்வோம்.

-விளம்பரம்-

துளசி

துளசி செடிகளை அனைவரது வீட்டிலுமே வளர்ப்பார்கள் காரணம் அது நல்ல மூலிகை செடி ஒருவருக்கு சளி பிரச்சனை இருந்தால் உடனடியாக துளசி இலைகளை பறித்து சாராகவோ அல்லது அப்படியேவும் மென்று உட்கொள்ளும் பொழுது அவர்களுக்கு அது நல்ல பலன்களை கொடுக்கிறது. ஆகையால் கண்டிப்பாக அனைவரும் வீட்டிலும் துளசி செடி இருக்கும் அதே துளசி செடியை சிலர் வழிபாடு முறைகளோடு வழிபடுவார்கள். அப்படி வழிபாட்டு முறைகளின் படி வழிபட வேண்டும் என்றால் எந்த திசையில் செடியை வைத்து வழிபட வேண்டும். எந்த மாதிரியான வழிபாடுகள் நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் துளசி என்பது மகாலட்சுமி என்று கருதப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து தூப தீப ஆராதனைகள் காட்டி வழிபட வேண்டும். அதேபோல் சூரிய ஒளி அதில் படுமாறு வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாது மாடங்கள் அமைத்து வழிபடும் பொழுது மேலும் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டின் நிலைப்படியை விட துளசி மாடம் சற்று உயரமாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் செல்வ செழிப்பும் லட்சுமி கடாட்ஷமும் அதிகமாக   இருக்கும்.

- Advertisement -


நம்முடைய வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்தாலே மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும். அப்படிப்பட்ட அருள் வேண்டுமென்றாலும் வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் நாக தேவதைக்கு பாலபிஷேகம் செய்வது மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

மூங்கில்

இப்பொழுது சிறிய தொட்டில்களில் சிறிய மூங்கில் செடிகள் வாஸ்து செடியாக அனேக இடங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அந்த செடியையும் வாங்கி வீட்டில் வைத்திருக்கும் பொழுது லட்சுமி கடாட்சம் கிடைக்கும். அதே போல் செம்பருத்தி செடியையும் லட்சுமி அம்சமாக இருக்கின்றன. ஆகையால் அந்த செம்பருத்தி செடியையும் வீட்டில் வளர்ப்பது செம்பருத்தி மலர்களை விநாயகருக்கு வைத்து வழிபடுவதும் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கடாசத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். அதேபோல் மாதுளை மரங்களை வீட்டில் வளர்ப்பதும் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும்.

கற்பூரவள்ளி

அதேபோல கற்பூரவள்ளி செடியையும் வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது கற்பூரவள்ளிச்செடி வாசனையை நுகர்வதால் உடல் நலத்திற்கு மிகுந்த ஆரோக்கியமும் மன அமைதியும் கிடைக்கின்றது. அதேபோல தினமும் கற்பூரவள்ளி செடியை பார்த்துவிட்டு நாம் வெளியில் செல்லும் பொழுது வீட்டில் லட்சுமி கடாட்சம் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். இந்த கற்பூரவள்ளி செடியையும் மகாலட்சுமி அம்சமாகவே பார்க்கின்றனர்.ஆகையினால் நீங்கள் கற்பூரவள்ளி செடிக்கு தினமும் நீரூற்றும் பொழுது வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீர வேண்டும் செல்வம் பெருக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டு நீர் விட்டால் அவை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். எத்தனை பெரிய கடன் பிரச்சனை இருந்தாலும் அவைகளை தீர்ப்பதற்கு கற்பூரத்தை வழி செடிகள் பயன்படுகின்றன. ஆகையினால் எந்த ஒரு பரிகாரத்தை மேற்கொண்டாலும் முழு மனதோடு மேற்கொள்ளும் பொழுது அவை நல்ல பலன்களை கொடுக்கும்.

-விளம்பரம்-