காலை உணவிற்கு எப்போதும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாமல் சற்று வித்தியாசமாக இந்த பச்சைப்பயறு கிச்சடியை செய்து பாருங்கள்!!
பொதுவான காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா கிச்சடி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது கிச்சடியா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. காய்கறிகள் எல்லாம் சேர்த்து போட்டு செஞ்சா அது கிச்சடி அப்பட
பொதுவான காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி, சப்பாத்தி இந்த மாதிரி தான் செய்வோம் ஆனா கிச்சடி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் அது நிறைய பேருக்கு சுத்தமா பிடிக்கவே பிடிக்காது கிச்சடியா அப்படின்னு ரொம்ப கடுப்பாக கேட்பாங்க. காய்கறிகள் எல்லாம் சேர்த்து போட்டு செஞ்சா அது கிச்சடி அப்படின்னு சொல்லுவாங்க கேரட், பீன்ஸ், பட்டாணி இதெல்லாம் சேர்த்து செய்யும் போது டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். ஆனால் இன்று நாம் சற்று வித்தியாசமாக காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் வெறும் பச்சை பயறு மற்றும் அரிசி சேர்த்து ஆரோக்கியமான பச்சைப்பயறு கிச்சடி எப்படி செய்வதென்று தான் பார்க்க இருக்கிறோம்.
உங்கள் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லன்னா இந்த பச்சைப்பயறு சேர்த்து ஒரு சூப்பரான கிச்சடி செய்து பாருங்கள். வாயில வச்ச உடனே கரைஞ்சு போயிடும் அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த பச்சைப்பயறு கிச்சடி செஞ்சு பாத்தீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.எப்போதும் ஒரே போன்ற பருப்பு, சாம்பார் சாதம் வைத்து சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் இந்த பச்சைப்பயிறு கிச்சடி வித்தியாச சுவையைக் கொடுக்கும். சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் பச்சைப்பயறில் அதிக வைட்டமின் உள்ளது.
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு. அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள இந்த பச்சைப்பயிறை குழம்பு வைத்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் பயிர் வகைகளை வைத்து ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுத்தால் உணவோடு சேர்த்து சத்து நிறைந்த பயிறு வகைகளும் வயிற்றுக்குள் சென்றுவிடும். வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு இதனை மதிய சாப்பாடாகவும் செய்து கொடுத்து விடலாம் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு வருவார்கள். இப்ப பச்சைப்பயறு வைத்து சுவையான கிச்சடி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான பச்சை பயறு மிளகு மசாலா இப்படி செய்து பாருங்க