- Advertisement -
உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில் புரோட்டீன் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த பச்சை பயறு மிளகு மசாலாவை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
-விளம்பரம்-
பச்சை பயறு மிளகு மசாலா | Green gram Pepper Masala
உடல் ஆரோக்கியத்தைபொறுத்த வரையில் உணவிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. அதிலும் நாம் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் உணவானது மிகவும் சத்து மிகுந்ததாக வேண்டும். அப்போது தான்அன்றைய நாள் முழுவதும் நாம் வேலை செய்ய அது நிச்சயம் உதவியாக இருக்கும். அந்த வகையில்புரோட்டீன் சத்து உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த சமையல்குறிப்பு பதிவில் அப்படி ஒரு சத்து மிகுந்த பச்சை பயறு மிளகு மசாலாவை பற்றி தான் நாம்தெரிந்து கொள்ள போகிறோம்.
Yield: 4
Calories: 347kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்சை பயறு
- 2 டீஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 பச்சை மிளகாய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை சிறிது
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் பச்சை பயறை நீரில் 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு தூவி அடுப்பல் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
- பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு குக்கரில் உள்ள பச்சை பயறை நீருடன் வாணலியில் ஊற்றி, மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து, உப்பு சுவை பார்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், பச்சை பயறு மிளகு மசாலா ரெடி!!!
Nutrition
Serving: 100g | Calories: 347kcal | Carbohydrates: 63g | Protein: 24g | Fat: 1.2g | Fiber: 16g | Calcium: 132mg | Iron: 6.7mg
- Advertisement -