Advertisement
ஸ்நாக்ஸ்

மாலை நேரங்களில் சாப்பிட மொறு மொறுனு பாசிப்பருப்பு முறுக்கு இப்படி செய்து கொடுங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காரசாரமான ஒன்று மொரு மொருப்பாக இருக்கும் முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ் ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்த செய்யும் இந்த முறுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில் மட்டுமே வாங்கி நாம் சாப்பிடுவோம்.

அப்படி சாப்பிடும் பொழுது ஒரு சிலருக்கு நிறைய எண்ணெய் இருப்பது பிடிக்காது. அதிலும் கடைகளில் பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்துவார்கள் அதனால் அது அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. நாம் நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்று முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்வதுண்டு. அதுவும் ஒரு சிலர் பாரம்பரியமான முறையில் செய்வார்கள் ஒரு சிலர் கடைகளில் மாவு வாங்கி செய்வார்கள்.

Advertisement

ஆனால் நாம் வீட்டிலேயே செய்யும் பாரம்பரியமான முறுக்கு தான் மிகவும் நல்லது. அதிலும் இன்று நாம் பாசிப்பயறு வைத்து ஒரு முறுக்கு செய்யப் போகிறோம். பொதுவாக பயிறு வகைகள் அனைத்தும் உடலுக்கு நல்லது ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே அவர்களுக்கு பிடித்தமான உணவுகளில் நாம் சத்தானவற்றை சேர்த்து செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் பாசிப்பருப்பு இருக்கு எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்.

பாசிப்பருப்பு முறுக்கு | Moong dal Murukku Recipe In Tamil

Print Recipe
பொதுவாக அனைவருக்கும் பிடித்த காரசாரமான ஒன்று மொரு மொருப்பாக இருக்கும் முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ்ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்த செய்யும் இந்த முறுக்குகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில்
Advertisement
மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும்கடைகளில் மட்டுமே வாங்கி நாம் சாப்பிடுவோம். குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே அவர்களுக்கு பிடித்தமான உணவுகளில் நாம் சத்தானவற்றைசேர்த்து செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் பாசிப்பருப்பு இருக்கு எப்படி செய்வதுஎன்று வாருங்கள் பார்க்கலாம்.
Course snacks
Cuisine tamil nadu
Keyword Moongh Dal Murukku
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 238

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/4 கிலோ பாசிப்பயறு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பாசிப்பயிரை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து, கசுடு எதுவும் இல்லாமல் ஒரு ஜல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் சலித்து வைத்துள்ள பாசி பயிறு மாவு இரண்டையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • இப்பொழுது தேவையான அளவு உப்பு, வெண்ணெய், கருப்பு எள், பெருங்காயம் அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அனைத்தையும் முறுக்கு மாவு பதத்திற்குபிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாய் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து முறுக்கு அச்சில்போட்டு எண்ணெயில் முறுக்கை பிழிந்து விடவும்.
  • அடுப்பை மீடியம் அளவில் வைத்து முறுக்கு நன்றாக பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.புனிதமான உடனே எடுத்தஎண்ணையை வடித்து விட்டு எடுத்து வைத்தால் மொறுமொறுவென ஆரோக்கியமான பச்சை பயிறு முறுக்கு தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Saturated Fat: 1.6g | Sodium: 13mg | Potassium: 381mg

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான அவல் முறுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

7 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago