மாலை நேரங்களில் சாப்பிட மொறு மொறுனு பாசிப்பருப்பு முறுக்கு இப்படி செய்து கொடுங்கள், மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காரசாரமான ஒன்று மொரு மொருப்பாக இருக்கும் முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ் ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்த செய்யும் இந்த முறுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும் கடைகளில் மட்டுமே வாங்கி நாம் சாப்பிடுவோம்.

-விளம்பரம்-

அப்படி சாப்பிடும் பொழுது ஒரு சிலருக்கு நிறைய எண்ணெய் இருப்பது பிடிக்காது. அதிலும் கடைகளில் பயன்படுத்திய எண்ணெயை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்துவார்கள் அதனால் அது அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. நாம் நம் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் என்று முறுக்கு போன்ற பலகாரங்கள் செய்வதுண்டு. அதுவும் ஒரு சிலர் பாரம்பரியமான முறையில் செய்வார்கள் ஒரு சிலர் கடைகளில் மாவு வாங்கி செய்வார்கள்.

- Advertisement -

ஆனால் நாம் வீட்டிலேயே செய்யும் பாரம்பரியமான முறுக்கு தான் மிகவும் நல்லது. அதிலும் இன்று நாம் பாசிப்பயறு வைத்து ஒரு முறுக்கு செய்யப் போகிறோம். பொதுவாக பயிறு வகைகள் அனைத்தும் உடலுக்கு நல்லது ஆனால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே அவர்களுக்கு பிடித்தமான உணவுகளில் நாம் சத்தானவற்றை சேர்த்து செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் பாசிப்பருப்பு இருக்கு எப்படி செய்வது என்று வாருங்கள் பார்க்கலாம்.

Print
3.72 from 7 votes

பாசிப்பருப்பு முறுக்கு | Moong dal Murukku Recipe In Tamil

பொதுவாக அனைவருக்கும் பிடித்த காரசாரமான ஒன்று மொரு மொருப்பாக இருக்கும் முறுக்கு. அனைவரது வீட்டிலும் ஸ்னாக்ஸ்ஆக இந்த முறுக்கு கண்டிப்பாக இருக்கும். அரிசி மாவு மட்டும் வைத்த செய்யும் இந்த முறுக்குகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் பிடிக்கும். ஆனால் இதை பெரும்பாலும்கடைகளில் மட்டுமே வாங்கி நாம் சாப்பிடுவோம். குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் எனவே அவர்களுக்கு பிடித்தமான உணவுகளில் நாம் சத்தானவற்றைசேர்த்து செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில் பாசிப்பருப்பு இருக்கு எப்படி செய்வதுஎன்று வாருங்கள் பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Moongh Dal Murukku
Yield: 4
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/4 கிலோ பாசிப்பயறு
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  • 3 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பாசிப்பயிரை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து, கசுடு எதுவும் இல்லாமல் ஒரு ஜல்லடையில் சலித்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் சலித்து வைத்துள்ள பாசி பயிறு மாவு இரண்டையும் சேர்த்து கலந்துகொள்ளவும்.
  • இப்பொழுது தேவையான அளவு உப்பு, வெண்ணெய், கருப்பு எள், பெருங்காயம் அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அனைத்தையும் முறுக்கு மாவு பதத்திற்குபிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாய் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து முறுக்கு அச்சில்போட்டு எண்ணெயில் முறுக்கை பிழிந்து விடவும்.
  • அடுப்பை மீடியம் அளவில் வைத்து முறுக்கு நன்றாக பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.புனிதமான உடனே எடுத்தஎண்ணையை வடித்து விட்டு எடுத்து வைத்தால் மொறுமொறுவென ஆரோக்கியமான பச்சை பயிறு முறுக்கு தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Saturated Fat: 1.6g | Sodium: 13mg | Potassium: 381mg

இதையும் படியுங்கள் : மொறு மொறுனு ருசியான அவல் முறுக்கு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!