பாட்டி காலத்து பாரம்பரிய பாசிப்பருப்பு புட்டு மிக மிக சுலபமாக இப்படி செய்து பாருங்களேன்!!!
பாரம்பரியமாக நம்முடைய பாட்டி செய்து கொடுத்த பலகார வகைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் மறைத்து கொண்டே வருகின்றோம். இப்படிப்பட்ட பலகாரங்களை நமக்கு இப்போது செய்யவும் நேரமில்லை. பக்குவமாக செய்வதற்கு ஆளும் கிடையாது. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அந்த காலத்தில் பாரம்பரியமாக நம் பாட்டி
பாரம்பரியமாக நம்முடைய பாட்டி செய்து கொடுத்த பலகார வகைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் மறைத்து கொண்டே வருகின்றோம். இப்படிப்பட்ட பலகாரங்களை நமக்கு இப்போது செய்யவும் நேரமில்லை. பக்குவமாக செய்வதற்கு ஆளும் கிடையாது. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அந்த காலத்தில் பாரம்பரியமாக நம் பாட்டிமார்கள் செய்து வந்த ஒரு பாசிப்பருப்பு புட்டு பக்குவமாக சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியும் கூட இது.
இனிப்பு பிடிக்காத குழந்தைகள் எவரும் இருக்க மாட்டார்கள். இனிப்பு சுவையோடு இருக்கும் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இனிப்பு வகையான உணவுகளை செய்வதற்கு நேரம் அதிகமாக தேவைப்படும். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பயத்தம்பருப்பு வைத்து ஒரு சுவையான புட்டு நினைத்த உடனே சட்டென செய்து விடமுடியும். அதிலும் இந்த புட்டு குழந்தைகளுக்குப் பிடித்த இனிப்பு சுவையில் இருக்கிறது. ஆகையால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தில் ஒரு கப் பயத்தம்பருப்பு எடுத்து இப்படி சுவையான புட்டு செய்து கொடுங்கள். குழந்தைகளும் வந்த களைப்பு தீர இந்த சுவையான புட்டை ருசித்து மகிழ்ச்சி அடைவார்கள். வாருங்கள் இந்த பயத்தம்பருப்பு புட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்