பாட்டி காலத்து பாரம்பரிய பாசிப்பருப்பு புட்டு மிக மிக சுலபமாக இப்படி செய்து பாருங்களேன்!!!

- Advertisement -

பாரம்பரியமாக  நம்முடைய பாட்டி செய்து கொடுத்த பலகார வகைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாம் மறைத்து கொண்டே வருகின்றோம். இப்படிப்பட்ட பலகாரங்களை நமக்கு இப்போது செய்யவும் நேரமில்லை. பக்குவமாக செய்வதற்கு ஆளும் கிடையாது. ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய அந்த காலத்தில் பாரம்பரியமாக நம் பாட்டிமார்கள் செய்து வந்த ஒரு பாசிப்பருப்பு புட்டு பக்குவமாக சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியும் கூட இது.

-விளம்பரம்-

இனிப்பு பிடிக்காத குழந்தைகள் எவரும் இருக்க மாட்டார்கள். இனிப்பு சுவையோடு இருக்கும் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். ஆனால் இனிப்பு வகையான உணவுகளை செய்வதற்கு நேரம் அதிகமாக தேவைப்படும். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பயத்தம்பருப்பு வைத்து ஒரு சுவையான புட்டு  நினைத்த உடனே சட்டென செய்து விடமுடியும். அதிலும் இந்த புட்டு  குழந்தைகளுக்குப் பிடித்த இனிப்பு சுவையில் இருக்கிறது. ஆகையால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் நேரத்தில் ஒரு கப் பயத்தம்பருப்பு எடுத்து இப்படி சுவையான புட்டு செய்து கொடுங்கள். குழந்தைகளும் வந்த களைப்பு தீர இந்த சுவையான புட்டை ருசித்து மகிழ்ச்சி அடைவார்கள். வாருங்கள் இந்த பயத்தம்பருப்பு புட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

- Advertisement -
Print
3 from 2 votes

பாசிப்பருப்பு புட்டு | Moong Dal Puttu Recipe In Tamil

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பயத்தம்பருப்புவைத்து ஒரு சுவையான புட்டு  நினைத்த உடனே சட்டெனசெய்து விடமுடியும். அதிலும் இந்த புட்டு  குழந்தைகளுக்குப்பிடித்த இனிப்பு சுவையில் இருக்கிறது. ஆகையால் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்குவரும் நேரத்தில் ஒரு கப் பயத்தம்பருப்பு எடுத்து இப்படி சுவையான புட்டு செய்து கொடுங்கள்.குழந்தைகளும் வந்த களைப்பு தீர இந்த சுவையான புட்டை ருசித்து மகிழ்ச்சி அடைவார்கள்.வாருங்கள் இந்த பயத்தம்பருப்பு புட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம்தெரிந்து கொள்வோம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Moong Dal Puttu
Yield: 4
Calories: 27.7kcal

Equipment

  • 1 இட்லி பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பயத்தம் பருப்பு
  • 1/4 கப் நெய்
  • 10 முந்திரிப்பருப்பு
  • 2 கை தேங்காய்த் துருவல்
  • 3/4 கப் வெல்லப்பொடி
  • 1/2 தேக்கரண்டி ஏலப்பொடி

செய்முறை

  • பயத்தம் பருப்பைஅரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் தண்ணீரை வடித்து, கொரகொரப்பாக 1 சிட்டிகை உப்பு சேர்த்து அரைக்கவும்.
  • 1 நெய் தடவிய தட்டில் அதை பரவலாக பரத்தி 10 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும். ஆறிய பிறகு நன்கு உதிர்த்துக் கொள்ளவும். வெல்லத்தை கெட்டிப்பாகு காய்ச்சவும்.
  • அது நன்கு உதிருதிராக வரும்வரை குறைந்த தீயில் அதை வறுக்கவும்.
  • பிறகு தேங்காய்த் துருவலைச்சேர்த்து மறுபடியும் சிறிதளவு நேரம் கிளறவும். ஏலப்பொடியையும் பாகையும் நன்கு கிளறி இறக்கவும்.

Nutrition

Serving: 200g | Calories: 27.7kcal | Protein: 3.9g | Cholesterol: 4mg | Sodium: 6.8mg | Potassium: 160mg | Calcium: 47.1mg | Iron: 0.5mg