திருவையாறு என்பது தியாகராஜ சுவாமிகளின் இல்லம், உலகப் புகழ் பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒன்றாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் மட்டுமே கிடைக்கும் அசோக அல்வா இங்கு மிகவும் சிறப்பானது.
அசோகா ஹல்வா பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்யப்படுகிறது. மற்ற வகை அல்வாக்களை விட இது மிகவும் சுலபம். அதே நேரத்தில், சுவை அமோகமாக இருக்கும். பாசிப்பருப்பை வைத்து நெய் சேர்த்து செய்ய படுவதால் , இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட.
மற்ற அல்வாவை செய்ய அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆனால் இந்த அசோகா அல்வாவை செய்வது மிகவும் சுலபம். சுவாமிக்கு இனிப்பு படைப்பதாக இருந்தால் அசோகா அல்வா அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை இருக்காது. இதனை சட்டன செய்து முடித்துவிட முடியும். அத்துடன் இதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கும். வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும். ஒருமுறை இதை செய்து சுவைத்து விட்டால் மீண்டும் அடுத்த முறை நீங்களே இதனை செய்ய தொடங்கி விடுவீர்கள். இந்த சுவையான பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
அசோகா அல்வா | Ashoka Halwa Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் பாசிப்பருப்பு
- 200 கிராம் சீனி
- 2 மேஜைக்கரண்டி கோதுமை மாவு
- 50 கிராம் நெய்
- 10 முந்திரிப் பருப்பு
- கேசரி கலர் சிறிது
செய்முறை
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மூழகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்பு நன்றாக வெந்ததும் நன்கு மசித்து மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானவுடன் கோதுமை மாவை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு அதனுடன் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, பாதி அளவு நெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
- அல்வா பதத்திற்கு சுருண்டு வரும் பொழுது சீனி, கேசரி பவுடர் பவுடர் இரண்டையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.
- சீனி நன்கு கரைந்து பருப்போடு சேர்ந்து கெட்டியாகும் வரை கை விடாமல் கிளறவும்.
- பிறகு மீதமுள்ள நெய், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான அசோகா அல்வா ரெடி.