ரப்டி மால்புவா இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!

- Advertisement -

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கும் கூட இது கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவங்களுக்கு ஜங்க் வகையறா ஸ்னாக்ஸ் ஐட்டங்களான கேக், பிரெட் டோஸ்ட், லேய்ஸ் சிப்ஸ், குர்குரே, அசைவம்னா சிக்கன் லாலிபாப், மட்டன் கபாப் போன்றவற்றிற்கு பதிலாக ஆரோக்கியமான வகையில் எதாவது செய்து கொடுங்கள். அந்த வகையில், இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மால்புவா செய்து கொடுக்கலாம். நிச்சயம் சுவையுடனே இருக்கும்.

-விளம்பரம்-

இதை சாப்பிடும் போது ஒன்று அல்லது இரண்டு துண்டுகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது சுகர் சிரப்பில் ஊற வைத்துச் செய்யும் ஸ்னாக் என்பதால் குழந்தைகளுக்கு புழுத்தொல்லை வந்து விடக்கூடாது. உணவுக்கு பிறகு ஏனோ ஒரு துண்டு கடலை மிட்டாய், ஒரு சிறிய துண்டு வெல்லம் இந்த மாதிரி இனிப்பு சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும். பெரும்பாலான விழாக்களில் உணவுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இனிப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை தான் மால்புவா.‌ மால்புவா எனும் சுவையான இனிப்பு பண்டம் ராஜஸ்தான் மற்றும் ஒடிஷாவில் மிகவும் பிரபலமானது. இது ஒரு வகை பேன் கேக் ஆகும். இந்த சுவையான‌ ரப்டி மால்புவாவை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -
Print
No ratings yet

ரப்டி மால்புவா | Rapdi Malpuva Recipe in Tamil

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கும் கூட இது கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அவங்களுக்கு ஜங்க் வகையறா ஸ்னாக்ஸ் ஐட்டங்களான கேக், பிரெட் டோஸ்ட், லேய்ஸ் சிப்ஸ், குர்குரே, அசைவம்னா சிக்கன் லாலிபாப், மட்டன் கபாப் போன்றவற்றிற்கு பதிலாக ஆரோக்கியமான வகையில் எதாவது செய்து கொடுங்கள். அந்த வகையில், இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மால்புவா செய்து கொடுக்கலாம்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: snacks, sweets
Cuisine: Indian
Keyword: Rapdi Malpuva
Yield: 3 People
Calories: 122kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர் பால்
  • 1 கப் மைதா
  • 1 கப் சர்க்கரை
  • 6 ஏலக்காய்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பால் பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைந்த தீயில் வைத்து பால் பாதியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பின் பால் நன்றாக சுண்டி பாதியளவு வந்ததும்அடுப்பை அணைத்து விடவும். பின்‌ பாலை ஒரு கப்பில் ஊற்றி சிறிது நேரம் ஆற விடவும்.
  • பால் நன்கு ஆறிய பிறகு அதில் மைதா சேர்த்து நன்றாக பிசையவும். கெட்டியாக இருந்தால் சிறிது பால் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக பாகு பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும்.
  • ஒரு‌ வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கரைத்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து வட்ட வடிவமாக எண்ணையில் ஊற்றி பொரித்தெடுக்கவும்.
  • பொரித்து எடுத்ததும் இதை நாம் செய்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் புரட்டி எடுக்க வேண்டும்.
  • அவ்வளவுதான் சுவையான ரப்டி மால்புவா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 122kcal | Carbohydrates: 12g | Protein: 8g | Fat: 4.6g | Sodium: 95.5mg | Potassium: 149mg | Sugar: 12.9g | Vitamin A: 249IU | Vitamin C: 120mg | Calcium: 79mg | Iron: 4.1mg

இதனையும் படியுங்கள் : சுவையான வாழைப்பழ மால்புவா இப்படி ஒரு முறை செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!