“அக்காரவடிசல்” என்பது திருச்சியை பூர்விகமாக கொண்ட ஒரு பொங்கல் வகை. இது பாரம்பரிய பிராமிண் உணவு, அதிகமாக பெருமாள் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும். இது ஸ்ரீவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கூட பிரசாதமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அரிசி, பாசிபருப்பு மறறும் பால் சேர்த்து குழைவிட்டு செய்யக்கூடியது தான் இந்த அக்காரவடிசல். வெல்லம், ஏலக்காய், நெய், பச்சை கற்பூரம், குங்குமப்பூ தூவி இறக்க சுவையும், மணமும் அள்ளும். அக்காரவடிசல், சக்கரை பொங்கலை போன்ற தோற்றத்தில் இருந்தாலும், சுவையில் மாறுபட்டே இருக்கும். அதற்கு காரணம், அதனுடன் சேர்க்கப்படும் பொருள்களின் அளவுகள், இரண்டிற்குமே வேறுபட்டிருக்கும்.
அக்காரவடிசல் சக்கரை பொங்கல் போன்று அரிசி, பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்டாலும், இதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை முற்றிலுமாக பாலிலேயே வேக வைத்து செய்யப்படுகிறது. சர்க்கரை காட்டிலும் வெல்லம் மற்றும் நெய் கூடுதலாக சேர்க்க வேண்டும். அக்காரவடிசல் என்றாலே ஸ்ரீரங்கம் பெருமாள் கோவில் தான் பேமஸ். அதே சுவையில் அதிலும் திருப்பாவையில் ஆண்டாள் சொல்வது போல உங்கள் வீட்டிலும் அக்கார வடிசல் செய்யணுமா? இந்த முறையில் செஞ்சு பாருங்கள். இந்த சுவையை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டீர்கள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அக்காரவடிசல் | Akkaravadisal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 2 கப் பச்சரிசி
- 1/2 கப் பாசிப்பருப்பு
- 4 கப் வெல்லம்
- 1 1/2 லி பால்
- 1/2 கப் நெய்
- 1 டீஸ்பூன் குங்குமப் பூ
- 1/2 கப் முந்திரி, திராட்சை
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
செய்முறை
- முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை நன்கு கழுவி சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசி மற்றும் பாசிப்பருப்பில் உள்ள தண்ணீரை நன்கு வடித்து விட்டு சேர்த்து சிறிது வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- பின் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதித்ததும் வறுத்து வைத்துள்ள அரிசி, பருப்பை சேர்த்து வேக வைக்கவும்.
- அரிசி, பருப்பு நன்கு வெந்ததும், அத்துடன் காய்ச்சாத பால், வெல்லம் சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- பின்னர் குங்குமப்பூ, ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் வேக விடவும்.
- பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு வறுத்த முந்திரி, திராட்சையை அக்காரவடிசலில் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான, சத்தான அக்காரவடிசல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான கல்கண்டு பொங்கல், இப்படி செஞ்சி பாருங்க டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்!!!