ருசியான கல்கண்டு பொங்கல், இப்படி செஞ்சி பாருங்க டேஸ்டியான பொங்கல் நாவில் கரைந்தோடும்!!!

- Advertisement -

பொங்கல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பொங்கல் பிரசாதம் வாங்குவதற்காகவே கோவிலுக்கு செல்பவர்கள் கூட நிறைய பேர். அந்த அளவுக்கு பொங்கலின் சுவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் இந்த பொங்கலை விரும்பி சாப்பிடுவார்கள். கருப்பட்டி பொங்கல் சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் என பொங்கல் நிறைய வகைகள் உண்டு.

-விளம்பரம்-

அந்த வகையில் கல்கண்டு பொங்கலும் அனைவருக்கும் பிடித்த ஒரு பொங்கல் வகை தான். இந்த கல்கண்டு பொங்கல் பால் பொங்கல் என்றும் அழைக்கப்படும். கோவிலிலும் பிரசாதமாக இந்த கல்கண்டு பொங்கல் வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம் வந்தால் கடவுளுக்கு படைக்க வீட்டில் நெய்வேதியமாக இந்த கற்கண்டு பொங்கலை செய்வார்கள். அந்த அளவிற்கு இதனுடைய சுவை சூப்பராக இருக்கும்.

- Advertisement -

ஆனால் இன்று நாம் பார்க்க போகும் இந்த கல்கண்டு உங்களுடைய சுவை இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். வீட்டிற்கு யாராவது சட்டை என்று விருந்தாளி வந்தால் கூட இனிப்பிற்காக இந்த கல்கண்டு பொம்பளை அவர்களுக்கு நொடியில் செய்து கொடுத்து விடலாம் அந்த அளவிற்கு மிகவும் சுலபமான ஒரு பொங்கல் தான் இந்த கல்கண்டு பொங்கல். வாங்க இந்த கல்கண்டு பொங்கல் சுவையா அட்டகாசமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
4.50 from 2 votes

கல்கண்டு பொங்கல் | Kalkandu Pongal Recipe In Tamil

கல்கண்டு பொங்கல் அனைவருக்கும் பிடித்த ஒரு பொங்கல் வகை தான். இந்த கல்கண்டு பொங்கல் பால் பொங்கல் என்றும் அழைக்கப்படும். கோவிலிலும் பிரசாதமாகஇந்த கல்கண்டு பொங்கல் வழங்கப்படும். அது மட்டும் இல்லாமல் வீட்டில் ஏதாவது ஒரு விசேஷம்வந்தால் கடவுளுக்கு படைக்க வீட்டில் நெய்வேதியமாக இந்த கற்கண்டு பொங்கலை செய்வார்கள்.அந்த அளவிற்கு இதனுடைய சுவை சூப்பராக இருக்கும். வாங்க இந்த கல்கண்டு பொங்கல் சுவையா அட்டகாசமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, snacks
Cuisine: tamil nadu
Keyword: Kalkandu Pongal
Yield: 4
Calories: 217kcal

Equipment

  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பச்சரிசி
  • 1 கப் கல்கண்டு
  • நெய் தேவையான அளவு
  • 2 கப் பால்
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 10 உலர்ந்த திராட்சை
  • 10 முந்திரி பருப்பு

செய்முறை

  • முதலில் அரிசியை கழுவி சுத்தம் செய்து அதனை குக்கரில் சேர்த்து அதனுடன் பாய் மற்றும் தண்ணீர் சேர்த்து நாலு விசில் விட்டு எடுக்க வேண்டும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் கல்கண்டு சேர்த்து நன்றாக கரைய வைக்க வேண்டும். பச்சரிசி சாதம் நன்றாக வெந்தவுடன் அதனை கல்கண்டு கரைந்தவுடன் அதில் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவேண்டும்.
  • பத்து நிமிடங்கள் கல்கண்டு கரைசலில் பச்சரிசி சாதமும் நன்றாக ஒன்று சேர்ந்தவுடன் அதனுடன் சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் உலர் திராட்சையை சேர்ந்தால் சுவையான கல்கண்டு பொங்கல் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Sodium: 21mg | Potassium: 281mg | Fiber: 3g | Sugar: 1g