உடல் சூட்டை தணிக்க ஆரோக்கியமான மோர் களி செய்து சாப்பிடுங்கள்!!

அடிக்கிற வெயிலுக்கு பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு ஈஸியாக என்ன செய்யலாம் என பெண்கள் அனைவரும் சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஏனென்றால் சுவையான அதேசமயம் சட்டுன்னு ஆரோக்கியத்துடன் செய்யக்கூடிய களி செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான

By Prem Kumar · 1/5/2026

அடிக்கிற வெயிலுக்கு பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு ஈஸியாக என்ன செய்யலாம் என பெண்கள் அனைவரும் சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஏனென்றால் சுவையான அதேசமயம் சட்டுன்னு ஆரோக்கியத்துடன் செய்யக்கூடிய களி செய்யலாம். மதிய வேளையில் மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான உணவு செய்து சாப்பிட விரும்பினால் இந்த மோர் களி செய்யுங்கள். கோடைக்காலம் வந்துவிட்டாலே உடல் சூடு பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள்.

உடல் அதிகமாக வெப்பமடைந்துவிட்டால், அதன் விளைவாக கண்களில் நீர் வடிதல், வயிற்று வலி போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்நிலையில் இவற்றைத் தவிர்க்க சிறந்த வழி உடல் சூட்டைக் குறைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது தான். அப்படி உடல் சூட்டைக் குறைக்கும் ஒரு அற்புதமான உணவு தான் களி. நமது முன்னோர்கள் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் தான் அவர்கள் அதிக வயதுடன் மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அதில் முக்கியமான ஒன்று அவர்கள் தினமும் காலையில் சாப்பிடும் ஆரோக்கியம் நிறைந்த மோர் களி.

மோர் மிளகாய், தயிர், அரிசி மாவு கொண்டு செய்யக் கூடியது இந்த மோர் களி. இதன் செய்முறை ஏறக்குறைய உப்புமா போல இருக்கும். அதில் ரவை, தண்ணீர் பயன்படுத்துவோம். இதில் அரிசி மாவும், தயிரும் பயன்படுத்துவோம். அவ்வளவே வித்தியாசம். காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கும். தயிரின் நன்மைகளை சொல்ல வேண்டிய அவசியமில்லை. மாலை நேரத்திலும் இதை சூடாக தயாரித்து கொடுக்கலாம். இதை சாப்பிட்ட பிறகு நம் வயிறு முழுமையாக நிரம்பிய உணர்வு கிடைக்கும். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான மோர் களி எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : மோர் குழம்பு ரொம்ப சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம்!!

Recipes AMP · Quick view
View full