Home சைவம் மோர் குழம்பு ரொம்ப சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு...

மோர் குழம்பு ரொம்ப சிம்பிளா இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சாப்பாடு சாப்பிடலாம்!!

மோர் குழம்பு பொதுவாக அனைவருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு குழம்பு அப்படின்னு சொல்லலாம் இந்த மோர் குழம்பு ஒவ்வொருத்தருடைய வீட்டிலேயும் ஒவ்வொரு மாதிரியும் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மோர் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு மசியல் சேப்பக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ஊறுகாய் இதெல்லாம் வைத்து சாப்பிட்டு பாருங்க மோர் குழம்பு சாப்பிடுவதற்கு சொர்க்கமா இருக்கும்.

-விளம்பரம்-

காய்ந்த மிளகாய் கடுகு உளுந்தம் பருப்பு இதெல்லாம் போட்டு தாளிச்சு இந்த மோர் குழம்பு வைக்கிறதால ருசியாவும் மணமாவும் சாப்பிடுறதுக்கே அவ்ளோ சூப்பரா இருக்கும். நீங்க என்னதான் செய்முறை இல்ல மோர் குழம்பு வச்சு இருந்தாலும் ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செய்முறையில மோர் குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க. மோர் குழம்பு வைக்க தெரியலையா கவலையே படாதீங்க இதே மாதிரி அளவுகளில் ஒரு தடவை மோர் குழம்பு வச்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். சமைக்க தெரியாதவங்க கூட இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க சூப்பரா வரும் இப்ப வாங்க இந்த மோர் குழம்பு எப்படி வைக்கிறதுன்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மோர் குழம்பு | Mor Kulambu Recipe In Tamil

மோர் குழம்பு பொதுவாக அனைவருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு குழம்பு அப்படின்னு சொல்லலாம் இந்த மோர் குழம்பு ஒவ்வொருத்தருடைய வீட்டிலேயும் ஒவ்வொரு மாதிரியும் செய்வாங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மோர் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா உருளைக்கிழங்கு மசியல் சேப்பக்கிழங்கு ரோஸ்ட் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ஊறுகாய் இதெல்லாம் வைத்து சாப்பிட்டு பாருங்க மோர் குழம்பு சாப்பிடுவதற்கு சொர்க்கமா இருக்கும். காய்ந்த மிளகாய் கடுகு உளுந்தம் பருப்பு இதெல்லாம் போட்டு தாளிச்சு இந்த மோர் குழம்பு வைக்கிறதால ருசியாவும் மணமாவும் சாப்பிடுறதுக்கே அவ்ளோ சூப்பரா இருக்கும். நீங்க என்னதான் செய்முறை இல்ல மோர் குழம்பு வச்சு இருந்தாலும் ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செய்முறையில மோர் குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Mor Kulambu
Yield: 4 People
Calories: 98kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் தயிர்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 டீஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டீஸ்பூன் பச்சரிசி
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 டீஸ்பூன் தேங்காய் துருவல்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • பச்சரிசி கடலை பருப்பு துவரம் பருப்பு அனைத்தையும் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்ததை சேர்த்து அதனுடன் இஞ்சி சீரகம் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக வைக்கவும்.
  • மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்த்து பத்து நிமிடத்திற்கு கொதிக்க வைத்து தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்து அதனையும் சேர்த்து கலந்து இரண்டு நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான மோர் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 98kcal | Carbohydrates: 3.2g | Protein: 11g | Fat: 4.3g | Sodium: 356mg | Potassium: 104mg | Vitamin A: 33IU | Vitamin C: 170mg | Calcium: 9mg | Iron: 4.7mg

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்டைல் தக்காளி மோர் கறி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!