சூப்பரான முடக்கத்தான் கீரை தோசை இப்படி மொறுகலா செய்து செஞ்சி கொடுத்தா எத்தனை தோசைனாலும் சாப்பிடுவாங்க!
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் து
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முடக்கத்தான் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. தினமும் இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முடக்கத்தான் கீரை உள்ளது என்றால், இதுவரை முடக்கத்தான் கீரையை கொண்டு பொரியல் செய்துள்ளீர்கள் என்றால் அப்படியானால் அடுத்தமுறை முடக்கத்தான் கீரையை கொண்டு தோசை செய்யுங்கள்.
முடக்கத்தான் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல தோசை செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு தோசை சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை முடக்கத்தான் கீரையில் இப்படி தோசை செய்து சுடச்சுட சாம்பார் அல்லது சட்னி செய்து கொஞ்சமாக நெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும். இன்று இந்த முடக்கத்தான் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். கீரையின் அடர் பச்சை நிறத்தில், சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கு குறைவில்லாத இந்த அற்புதமான தோசை ரெசிபியை நிச்சயம் செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : கமகமனு சூப்பரான ஆலு தோசை இப்படி செய்து கொடுத்தால் வயிறு நிறைய நிறைய சாப்பிடுவாங்க!