Home காலை உணவு கமகமனு சூப்பரான ஆலு தோசை இப்படி செய்து கொடுத்தால் வயிறு நிறைய நிறைய சாப்பிடுவாங்க!

கமகமனு சூப்பரான ஆலு தோசை இப்படி செய்து கொடுத்தால் வயிறு நிறைய நிறைய சாப்பிடுவாங்க!

இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, பொடி தோசை, முட்டை தோசை, கோதுமை தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மசாலா தோசை தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலம். தோசை என்றாலே பலருக்கும் கொள்ளை பிரியம் தான் அதுவும் நன்றாக சிவந்த மொரு மொருவென்ற தோசையைதட்டில் வைத்து அதற்கு சாம்பார் சட்னி கொண்டு வந்து வைத்தால் போதும். அப்படியே அந்த தோசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு தோசை பிரியர்கள் அதிகம். தினமும் காலையில் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்று காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிட கூடிய ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகிறோம்.

-விளம்பரம்-

அதுவும் உருளைக்கிழங்கை வைத்து மிகவும் சுவையான Breakfast செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். தோசையை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். அதிலும் தோசைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிடக்கூடிய வகையில் ஒருசில தோசைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் உருளைக்கிழங்கு தோசை. காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிகவும் சுவையானதும் சத்தும் மிகுந்தது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் கலோரிகளும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு தோசையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
No ratings yet

ஆலு தோசை | Aloo Dosa Recipe In Tamil

இட்லி பிடிக்குமா? தோசை பிடிக்குமா? என்று கேட்டால் முதலில் கிடைக்கும் பதில் தோசை தான். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் தோசை என்றால் மிகவும் பிடிக்கும். தோசையில் பல வகைகள் உண்டு. கல் தோசை, வெங்காயத் தோசை, ரவா தோசை, மசாலா தோசையென அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் மசாலா தோசை தென்னிந்திய உணவில் மிகவும் பிரபலம். தோசை என்றாலே பலருக்கும் கொள்ளை பிரியம் தான் அதுவும் நன்றாக சிவந்த மொரு மொருவென்ற தோசையைதட்டில் வைத்து அதற்கு சாம்பார் சட்னி கொண்டு வந்து வைத்தால் போதும். அப்படியே அந்த தோசைக்கு அடிமையாகி விடுவார்கள். அந்த அளவிற்கு தோசை பிரியர்கள் அதிகம். தினமும் காலையில் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அந்த வகையில் இன்று காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிட கூடிய ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகிறோம்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Aloo Dosa
Yield: 4 People
Calories: 110kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1/4 கப் கடலை மாவு
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • 2 பெரிய உருளைக்கிழங்கு

செய்முறை

  • முதலில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதன் தோளை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இந்த உருளைக்கிழங்கை‌ நாம் கலந்து வைத்த மாவில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானவுடன் ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை வார்த்து வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆலு தோசை தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 110kcal | Carbohydrates: 6.2g | Protein: 3g | Fat: 1.8g | Potassium: 310mg | Fiber: 2g | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான கொய்யாக்காய் சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க!