இட்லி தோசைக்கு ஏற்ற பக்காவான கொய்யாக்காய் சட்னி ஒரு தரம் இப்படி செய்து பாருங்க அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -

சட்னில பலவிதம் இருக்கு நம்ம பலவிதமான காய்கறிகள் , கீரைகளை வச்சு விதவிதமான சட்னிகள் செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போற சட்னி கொய்யா காய் சட்னி. கொய்யா காயில் சட்னியா என்னங்க நீங்க புதுசா சொல்றீங்க அப்படின்னு யோசிக்காதீங்க. இது ரொம்பவே நல்லா இருக்கு சுவையா இருக்கும் இந்த கொய்யாக்காய் சட்னி . எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் கொய்யாக்காய் அப்படிங்கிறது அதோட வாசனைக்காகவே நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும்.

-விளம்பரம்-

சுவைக்கு முன்னாடி எப்போதுமே ஒரு உணவு பொருள் இருக்கு அப்படின்னா அது வாசனையால நம்ம கவர்ந்தா மட்டும் தான் நம்ம அந்த உணவு பொருள் மேல ரொம்ப அதிக ஈடுபாட்டோட சாப்பிடுவோம். அந்த வகையில் கொய்யாப்பழம் அப்படிங்கறது நல்ல ஒரு மனம் மிக்க காய் அதோட வாசனைக்காகவே நிறைய பேர் கொய்யாப்பழத்தை வாங்கி சாப்பிட வாங்க. அப்படி சுவையா இருக்குற இந்த கொய்யாப்பழத்தை வைத்து சூப்பரான ஒரு சட்னி செய்ய போறோம் அந்த சட்னி எல்லாருக்கும் ரொம்பவே பிடிக்கும். அப்படின்னு சொன்னா உங்களால நம்ப முடியல கண்டிப்பா அந்த சட்னி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.

- Advertisement -

வித்தியாசமான உணவு பொருட்கள் அப்படிங்கறது இப்போ நிறையவே பழக்கத்தில் வந்துட்டு இருக்கு. இதுல வித்தியாசம் அப்படிங்கறது தாண்டி ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவுகள் அப்படின்னு சொல்லலாம். ஏன்னா காய்கறிகள் பழங்களை வைத்து விதவிதமான உணவுகள் செய்து சாப்பிடும் பொழுது நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. அந்த மாதிரியான வகையில் இன்னைக்கு இந்த சட்னியை ரொம்பவே டேஸ்டா செய்து சாப்பிட இருக்கும். இந்த கொய்யாக்காய் சட்னியை ரொம்பவே சுலபமா செய்துவிடலாம். அதுவும் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும். சரி வாங்க இந்த கொய்யாக்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்..

Print
5 from 2 votes

கொய்யா காய் சட்னி | Guava chutney recipe in tamil

வித்தியாசமான உணவு பொருட்கள் அப்படிங்கறது இப்போ நிறையவே பழக்கத்தில் வந்துட்டு இருக்கு. இதுல வித்தியாசம் அப்படிங்கறது தாண்டி ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவுகள் அப்படின்னு சொல்லலாம். ஏன்னா காய்கறிகள் பழங்களை வைத்து விதவிதமான உணவுகள் செய்து சாப்பிடும் பொழுது நமக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள் கிடைக்குது. அந்த மாதிரியான வகையில் இன்னைக்கு இந்த சட்னியை ரொம்பவே டேஸ்டா செய்து சாப்பிட இருக்கும். இந்த கொய்யாக்காய் சட்னியை ரொம்பவே சுலபமா செய்துவிடலாம். அதுவும் ரொம்ப டேஸ்டாவும் இருக்கும். சரி வாங்க இந்த கொய்யாக்காய் சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: chutney
Cuisine: tamilnadu
Keyword: aleovera chutney, Andhra Cucumber Chutney, Bachelors Kaara chutney, Banana Stem Chutney, Bombay Chutney, brinjal chutney
Yield: 6 People
Calories: 95kcal
Cost: 50

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் கொய்யாக்காய்
  • 1 கப் வெங்காயம்
  • 3 பச்சை பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் சீரகம்
  • புளி   சிறிதளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொய்யா காயை பொடியாக நறுக்கி வெந்நீரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், கடலைப்பருப்பு ,, உளுந்து சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்
  • பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  • பின்பு அதில் பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு மிக்ஸி ஜாரில் வேக வைத்துள்ள கொய்யாக்காய் வதக்கி வைத்துள்ள பொருள்களோடு புளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள கொய்யாக்காய் சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறினால் சுவையான கொய்யாக்காய் சட்னி தயார்.

Nutrition

Calories: 95kcal | Carbohydrates: 8g | Protein: 9g | Fat: 4g

இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற ருசியான மாங்காய் மிளகாய் சட்னி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!