பச்சை பயறு வைத்து வித்தியாசமான முகலாய் மூங் தால் இரவு உணவிற்கு சைடு டிஷ்ஷா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்தால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறைக் கொண்டு முகலாய் மூங் தால் செய்யுங்கள். இந்த முகல

By Prem Kumar · 11/12/2025

இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்தால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் பச்சை பயறு உள்ளதா? அப்படியானால் அந்த பச்சை பயறைக் கொண்டு முகலாய் மூங் தால் செய்யுங்கள். இந்த முகலாய் மூங் தால் ரெசிபியை நீங்கள் ஒரே ஒரு தடவை செய்து பார்த்துவிட்டால் போதும் இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீர்கள் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான ரெசிபி தான் இது.

பொதுவாக புரதம் நிறைந்த பச்சை பயறில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது. கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்குவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பச்சை பயறு ஒரு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். வயிற்றுப்புண்ணை போக்கக்கூடிய பச்சை பயறை கூட்டு, பொரியல் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் அதனால் இப்படி செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சப்பாத்தி பூரிக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த முகலாய் மூங் தால் ரெசிபியை சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோடு இந்த சூப்பரான ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்ன்னு எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இப்போது சுவையான முகலாய் மூங் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

‌இதனையும் படியுங்கள் : சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா இந்த சோயா கறி ஒரு தடவ செஞ்சு பாருங்க!!

Recipes AMP · Quick view
View full