- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
உங்க வீட்ல தக்காளி இல்லையா அப்போ கவலையே படாதீங்க தயிர் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான சோயா கறி செய்யலாம். இதை சுடு சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். இந்த டிஷ்ஷூக்கு தயிர் இருந்தாலே போதுமானது தான் நிறைய ஸ்பைசஸ் எதுவும் சேர்க்காமல் ரொம்ப சிம்பிளா வைக்கக்கூடிய அந்த சோயா கறிய ஒரு தடவை உங்க வீட்டுல செஞ்சு பாருங்க. டேஸ்ட் நீங்க எதிர்பார்க்கிறதை விட ரொம்பவே சூப்பரா இருக்கும். வீட்ல இருக்குற சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் மீல்மேக்கர்ல கிரேவி மீல்மேக்கர் 65 செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான சோயா கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சோயா சங்ஸ் வெஜ் பிரியாணியை உதிரி உதிரியாக அருமையான சுவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன்!!
Ingredients
Method
முதலில் சோயா அல்லது மீல் மேக்கரை சுடு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தயிருடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்த விழுது தயிர் கலவை அனைத்தையும் சேர்த்து உப்பு போட்டு கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அதனுடன் ஊற வைத்த சோயாவை சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடம் வேக வைத்த பின்னர் மற்றும் கஸ்தூரி மேத்தி தூவி இறக்கினால் சுவையான சோயா கறி தயார்.






